Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த புகழ்ச்சியெல்லாம் வேண்டாம்ங்க.. சட்டசபையில் பளிச்சென்று சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகழ்ந்து பேசுவதை எப்போதுமே தாம் விரும்புவதில்லை என்றும் இதை ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தாம் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சண்முகய்யா முதலமைச்சரை புகழ்ந்து பேசிய நிலையில், குறுக்கிட்ட முதல்வர் புகழாரத்தை நிறுத்தச் சொன்னார்.

தமிழக சட்டசபை

தமிழக சட்டசபை

தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மீதான மானியக்கோரிக்கை இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி பதில் நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில் சமூகநலத்துறை தொடர்பாக கேள்வி எழுப்ப எழுந்த ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சண்முகய்யா, முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

முதல்வர் வேண்டுகோள்

முதல்வர் வேண்டுகோள்

முதல்வர் ஸ்டாலின் பற்றி கருணாநிதி கூறிய உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற பழங்கதைகளையும் தனது புகழாரத்தில் சேர்த்துக்கொண்டார். இவ்வாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கண்டிப்பும், உரிமையும் கலந்த தொணியில் வேண்டுகோள் விடுத்தார்.

கேள்வி நேரம்

கேள்வி நேரம்

கேள்வி நேரம் என்பது முக்கியமானது என்பதால் அதை வினாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என திமுக சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இதனால் பதற்றம் அடைந்த திமுக எம்.எல்.ஏ. சண்முகய்யா, விறுவிறுவென தாம் கேட்க வந்த கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

புகழாரங்கள்

புகழாரங்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி இவ்வளவு தூரம் அறிவுறுத்தி அமர்ந்த பிறகும் புகழாரங்களை திமுக உறுப்பினர்கள் விட்டதாக இல்லை. திமுக கொறடா கோவி செழியன் பேசும் போது, சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+