சின்சியாரிட்டி.. 4 நாளில் வீட்டு ஓய்வை கைவிட்ட முக ஸ்டாலின்! தலைமை செயலக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பு
சென்னை: கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் இன்று முதல் முறையாக தலைமை செயலகம் சென்று ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். வீட்டில் ஒருவாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறிய நிலையில் 4 நாளிலேயே அவர் தலைமை செயலகம் திரும்புகிறார்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனை செய்தார்.
கடந்த 12ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியாது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அதன்பிறகு ஜூலை 14ல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்டாலின் டிஸ்சார்ஜ்
மருத்துவமனையில் முக ஸ்டாலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் கொரோனாவில் இருந்து மீண்டார். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் போன் செய்து நலம் விசாரித்தனர். இதையடுத்து கடந்த 18 ம் தேதி முக ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆனார்.

வீட்டு ஓய்வை முடித்து கொண்ட ஸ்டாலின்
மேலும் ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து முக ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே தனது பணியை மேற்கொண்டார். முக்கிய கோப்புகளை வீட்டில் இருந்து அவர் ஆய்வு செய்து முதல்வர் பணியை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆகி 4 நாட்களே ஆன நிலையில் முக ஸ்டாலின் வீட்டு ஓய்வை முடித்து கொண்டார்.

தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம்
அதன்படி இன்று முக ஸ்டாலின் வீட்டில் இருந்து தலைமை செயலகம் வந்தார். நிதித்துறை மற்றும் செஸ் ஒலிம்யாட் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதாவது 2022-23 நிதியாண்டின் மாநிலத்தின் வருவாய் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் உள்பட அனைவரும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர்.

யாரெல்லாம் பங்கேற்பு?
இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, தொழில் முதலீட்டு ஊக்குவிக்கும் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் , வணிகவரி ஆணையர் தீரஜ்குமார் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து தொடர்ந்து அவர் தனது பணியை தனது அலுவலகத்திலேயே மேற்கொள்ள உள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications