டாவோஸ் மாநாட்டில் இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனை! விஜய் போடும் பக்கா ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திற்கு சர்வதேச அளவில் புதிய முதலீடுகளை கொண்டுவரும் நோக்கில், முதல்வர் விஜய் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் இந்த மாநாட்டில் கலந்துகொண்டால், டாவோஸ் மாநாட்டில் பங்கேற்கும் முதல் தமிழக முதலமைச்சர் என்ற பெருமையைப் பெறுவார்.

தமிழ்நாட்டிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட முதல்வர் விஜய் இதற்காகவே லண்டன் சென்றிருந்தார். இதற்கிடையே உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்ப தமிழக அரசு புதிய முயற்சியை எடுக்கவுள்ளது.

Tamil Nadu CM Vijay to Attend Davos World Economic Forum TVK

முதல்வர் விஜய்

அதாவது உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் முக்கியமான சர்வதேச கூட்டமாக டாவோஸ் உலக பொருளாதார மன்ற மாநாடு விளங்குகிறது. இந்த மாநாட்டில் நேரடியாக முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி, தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது தொழில்துறை அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு, பின்னர் டிஆர்பி ராஜா ஆகியோர் டாவோஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தமிழகத்திற்கான முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்தனர். ஆனால், தமிழக முதலமைச்சர் ஒருவர் நேரடியாக இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளது இதுவே முதல்முறையாகும்.

தவெக நம்பிக்கை

விஜய்யின் இந்த பயணம் தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்றும் தமிழகத்திற்கு சர்வதேச அளவில் கூடுதல் கவனத்தை பெற்றுத்தரும் என்று தவெக நம்பிக்கை தெரிவித்துள்ளது.. இது குறித்து தவெக செய்தி தொடர்பாளர் கூறுகையில், "விஜய்யின் டாவோஸ் பயணத்துக்கு பிறகு தமிழகத்துக்கு புதிய கவனமும், அதிக அளவிலான முதலீடுகளும் கிடைக்கும். உலக தலைவர்களுடன் நேரடி சந்திப்பு என்பது மாநிலத்திற்கு உதவும். மேலும், டாவோஸில் விஜய்க்கு இதுவரை எந்தவொரு உலக தலைவருக்கும் கிடைக்காத அளவிலான வரவேற்பு கிடைக்கும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு

தமிழகத்தில் புதிய முதலீடுகள் வருவதில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், விஜய்யின் டாவோஸ் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையே முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசு ஆந்திரப் பிரதேசத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக ஆளும் தவெக குற்றம்சாட்டியுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இதனால் ஆந்திராவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தவெக குற்றஞ்சாட்டியுள்ளது.

முதலீடுகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்களை அணுகும்போது மத்திய அரசும், வெளியுறவு அமைச்சகமும் தமிழகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மத்திய அரசிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டினாலும், அதையும் தாண்டி தமிழகத்திற்கு ஏற்கெனவே ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதாக தவெக தரப்பு கூறியுள்ளது. இந்த ஒப்பந்தங்களை நடைமுறையில் தொழில் திட்டங்களாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு அழைத்து வருவதுடன், ஏற்கெனவே இங்கு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+