தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 11,318 ஆக உயர்வு.. ஒரே நாளில் 1,971 பேருக்கு கொரோனா .. சென்னையில் ஷாக்
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் 1779 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 1,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,487 இல் இருந்து 1,971 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 739 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4416 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால் பழையபடி நிலைமை மோசமாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இன்றைய பாதிப்பு
ஏனெனில் இன்று ஒரே நாளில் 1,971 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,75,190 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,131 பேர் இன்று மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,51,222 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10,487 இல் இருந்து 11,318 ஆக உயர்ந்துள்ளது.

அதிக மரணம்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12,650 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 3 பேரும், மதுரை, கிருஷ்ணகிரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

வேகமெடுக்கும் பரிசோதனை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 84,676 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,88,55,868 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 85,053 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 1,91,77,274 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

மாவட்ட பாதிப்பு நிலவரம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் மிக அதிகமாக பரவி வருகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 739 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 205 பேருக்கும், கோவையில் 173 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 111 பேருக்கும், திருவள்ளூரில் 107 பேருக்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கேஸ்கள்
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரே நாளில் 10,487 இல் இருந்து 11,318 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் 4416 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1197 பேரும், கோவையில் 1013 பேரும், திருவள்ளூரில் 518 பேரும், தஞ்சாவூரில் 501 பேரும், காஞ்சிபுரத்தில் 363 பேரும், மதுரையில் 219 பேரும், திருப்பூரில் 273 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்-