தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது .. இந்த பட்டியலில் யார், யார்?.. முழு விவரம்!
சென்னை: ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்பாக திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தது. இதனை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இதன்பின்பு கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றவர்களின் பட்டியலை தயார் செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது
இந்த உத்தரவின்படி கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்றவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வந்த நிலையியல் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நகைக் கடன் விவரங்கள்
இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நகை கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வு சேலம் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் முடிந்துள்ளது. ஏற்கெனவே மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு. அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி பெறாத தேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டு, அந்தப் பட்டியல்கள் அனைத்தும் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எக்செல் படிவத்தில் பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தன.

இவர்களுக்கெல்லம் நகைக் கடன் தள்ளுபடி கிடையாது
* ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர்
* நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள்
* 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினர்
* கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்
* கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்

அனைத்து அரசு ஊழியர்கள்
* அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்
* குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்
* ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்
* எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினர்
* ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற AAY குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோர் நகை கடன் தள்ளுபடி பெறாத தேர்வர்கள் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications