ஜல்லிக்கட்டு போட்டிக்கான தமிழக அரசின் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு.. வீரர்களுக்கு மேஜர் உத்தரவு
சென்னை: 2023ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் மாடுபிடி வீரர்கள், காளைகளுடன் களத்துக்கு வரும் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்பதோடு, 2 நாளுக்கு முன்பு எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.
அதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடைக்கோரி பீட்டா சார்பில் தொடரப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு
இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தீவிரமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கொரோனா பரவல் அச்சம் உள்ள நிலையில் அதுசார்ந்த சாரம்சங்களின் அடிப்படையில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

குழு அமைத்து கண்காணிப்பு
அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளைகளுடன் வரும் 2 பேரும் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாடுபிடி வீரர்கள் கவனத்துக்கு..
மேலும் மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அதோடு வீரர்கள் போட்டிக்கு 2 நாளுக்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் வழிக்காட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகள் விழ்த்து விடப்படும் நேரம் முதல் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு
இதுதவிர ஜல்லிக்கட்டு போட்டியை அதிகபட்சம் 300 பேர் பார்க்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மொத்த இருக்கையில் பாதியளவுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசின் வழிக்காட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசால் அனுமதித்த இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது. இந்த உத்தரவு மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!

Click it and Unblock the Notifications