ரேஷன் கார்டு + மின்சார கட்டணம்.. புதிய ரூட் எடுக்கும் தமிழ்நாடு அரசு.. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலும் பணம் புழங்க கூடிய சேவைகளில் கட்டண முறையை முடிந்த அளவில் ஆன்லைன் வழியாக மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இரண்டு சேவைகளில் ஆன்லைன் கட்டணங்களை அல்லது யுபிஐ கட்டணங்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பல துறைகள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. முக்கியமாக கடந்த இரண்டு வருடமாக எல்லா துறைகளும் ஆன்லைன் மையமாகி வருகிறது.

Tamil Nadu government is taking innovative route in Ration card and Electricity bill payments

ரேஷன் அட்டைகளும் கூட ஸ்மார்ட் அட்டைகள் ஆகிவிட்டன. ஆன்லைனிலும் கூட மின்சார கட்டணத்தை செலுத்த எளிய வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் ரேஷன் மற்றும் டாஸ்மாக் இரண்டிலும் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

மின்சார கட்டணம்

இந்த நிலையில்தான் மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை., தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 2000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம்.

மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளதாம்.

ஆனால் இன்னும் இந்த புதிய விதி நடைமுறைக்கு வரவில்லை. முறையான ஆலோசனைக்கு பின்பே இந்த விதி நடைமுறைக்கு வருவது பற்றி முடிவு எடுக்கப்படும்.

க்யூ ஆர் கோட்:

இன்னொரு பணம் புழங்கும் இடமான ரேஷன் கடைகளிலும் இதே போல ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்பட உள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த விநியோக முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள். எல்லோருக்கும் இந்த புதிய வசதி கொண்டு வரப்படும். அரசின் குறிப்பிட்ட துறைகளில் உள்ள கஜானாவிற்கு நேரடியாக பணம் செல்ல இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது.

பண மோசடி, லஞ்சம் போன்றவை இதனால் கொஞ்சம் கொஞ்சமா குறையும்.

ஆன்லைனில் கட்டுவது எப்படி?

நீங்கள் ஆன்லைன் மூலம் மின்சார கட்டணம் செலுத்த விரும்பினால் பின்வரும் முறைகளை பின் பற்ற வேண்டும்.

படி 1 - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tnebnet.org/awp/login?locale=en என்ற பக்கத்திற்கு செல் வேண்டும்.

படி 2 - உங்களுக்கு லாக் இன் இருந்தால் இந்த பக்கத்தில் லாக் இன் செய்ய முடியும்.

படி 3 - இல்லையென்றால் இதில் உள்ள quick pay என்ற வசதியை பயன்படுத்த முடியும்.

படி 4 - அதில் உங்கள் கஸ்டமர் ஐடியை கொடுக்க வேண்டும். உங்களின் 2 இலக்க மண்டல எண் மற்றும் 9 இலக்க கஸ்டமர் எண்ணை கொடுக்க வேண்டும். கஸ்டமர் எண் உங்கள் மின் அட்டையில் இருக்கும்.

உங்கள் மண்டல எண் என்பது நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை பொறுத்து மாறுபடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+