Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் மீது பெரும் சுமை...சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் - அன்புமணி

சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்; பொருளாதார சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% முதல் 150% வரை சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்க, மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன் சொத்து வரி பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருப்பதால், வருவாய் குறைந்து, உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் , மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 600 - 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75சதவிகிதமும்,1,201 - 1,800 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 100சதவிகிதமும்,1,801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 150சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பம்பர் பரிசுகள் காத்திருப்பதாக கிண்டல் அடித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் ட்வீட்

அன்புமணி ராமதாஸ் ட்வீட்

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்துவரி 150% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது என்று பதிவிட்டுள்ளார்.

 சுமைகள்

சுமைகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்த கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

பொருளாதார சுமை

பொருளாதார சுமை

சொத்துவரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்; பொருளாதார சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும்!" என்று பதிவிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

2022 - 23 ஆம் நிதியாண்டு

2022 - 23 ஆம் நிதியாண்டு


தற்போது உள்ள சொத்து வரியில்‌, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும்‌ உயர்த்தப்படுகிறது. அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ இதர 20 மாநகராட்சிகளில்‌, சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம்‌ நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+