நாளை முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது? வருகிறது பழைய ஓய்வூதிய திட்டம்? ரெடியான அமைச்சர்கள் மீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு நாளை பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முக்கியமான முடிவை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் சிறப்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

நாளை நடைபெறும் இக்கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொள்வார்கள். சென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் முன்வைத்த வெவ்வேறு பிரச்சனைகள், குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாகப் பேசப்படும்.

Tamil Nadu government to hold a important meeting tomorrow Old pension scheme may come back

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பழைய ஓய்வூதியத் திட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ஓய்வுபெறும் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். அகவிலைப்படியும் (DA) அவ்வப்போது திருத்தப்படும். இது ஊழியர்களுக்கு சிறந்த நிதி பாதுகாப்பையும் நிலையான வருமானத்தையும் உறுதி செய்கிறது.

கடந்த ஜனவரி 1, 2004 முதல், புதிய அரசு ஊழியர்களுக்கு OPS திட்டம் நிறுத்தப்பட்டு, பங்களிப்புத் திட்டமான தேசிய ஓய்வூதிய முறை (NPS) அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தை சார்ந்த NPS, நிதிப் பாதுகாப்பில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் சில மாநிலங்கள் OPS திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும், பல மாநிலங்களில் 2004-க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். தமிழக அரசும் இதே வழியைக் கடைப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆயினும், இது பழைய ஓய்வூதியக் கோரிக்கையுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய சலுகையே.

தமிழ்நாடு பழைய ஓய்வூதியத் திட்டம்

2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்குவதால், ஸ்டாலின் அரசு விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்துடன், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவது போன்ற பிற நீண்டகால வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். ஆலோசனைக் குழுக்களின் பரிந்துரைகள் விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

OPS திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இழப்புகளைக் குறைக்கும் வகையில் சில மாற்றங்களுடன் இத்திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் சமரச திட்டமாக அமையும்.

திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு பாரம்பரியமாக அதிகம். ஆனால், முக்கிய கோரிக்கைகள் நிறைவேறாததால் ஒருவித அதிருப்தி நிலவுகிறது. இது வரவிருக்கும் தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்ததாகவும், தபால் வாக்குகள் அதிமுக, பாஜகவுக்குச் சென்றது இதற்கு சான்றாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தி வாக்குகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசு ஊழியர்களின் மனசை திருப்திப்படுத்தும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர திட்டமிட்டுள்ளார். அகவிலைப்படி உயர்வு, சலுகைகள் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+