எந்தெந்த விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி? வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், எந்த மாதிரியான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதி உண்டு? என்பது குறித்த வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது.

Vinayagar Chaturthi

நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, பொது மக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.

1. களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, பாதிக்காத செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் பாதுகாப்பான சுற்றுச்சூழலை மூலப்பொருள்களால் முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள். வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், மரங்களின் இயற்கை பிசின்கள் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படலாம்.

3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயனசாயம்/எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையா ககொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

5. சிலைகளை அழகு படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள வாரியத்தின் இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.

விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

விநாயகர் சதுர்த்தி விழா-செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

  • சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள்.
  • பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது.
  • சுற்றுச்சூழலுக்கு அலங்கார உகந்த பொருட்களை பயன்படுத்தவும்
  • சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது.
  • சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் மற்றும் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.
  • சிலைகளின் மேல் பூசிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள இரசாயனசாயங்கள் மற்றும் மக்கும் தண்மையற்ற /எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்த கூடாது.
  • சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக | பயன்படுத்தவும்.
  • சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பூஜை பொருட்களை பொருட்களாக பயன்படுத்த கூடாது.
  • அகற்றி துவைத்து மீண்டும் துணிகளையே அலங்காரத்திற்கு உபயோகிக்ககூடிய அலங்கார பயன்படுத்தவும்.
  • வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட அலங்காரங்களை பயன்படுத்த கூடாது.
  • பிரசாத மக்கும் /விநியோகத்திற்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் கண்ணாடி மற்றும் கோப்பைகளை பயன்படுத்தவும்.
  • பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியகூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும். அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது. அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது. ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது. ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+