"விஜய்யண்ணா நன்றி!" தவெக ஆட்சியில் தொடர்ந்து சரியும் GST கலெக்ஷன்.. சீண்டும் பாஜக வினோஜ் பி. செல்வம்
சென்னை: நாட்டின் முக்கிய மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி கலெக்ஷன் குறைந்துள்ளது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், தமிழக பாஜகவின் வினோஜ் பி. செல்வமும் தமிழக முதல்வரையும் தொழில்துறை அமைச்சரையும் சாடியுள்ளார்.
மத்திய நிதித்துறை அமைச்சகம் சமீபத்தில் மாநில வாரியாக ஜிஎஸ்டி கலெக்ஷன் குறித்த டேட்டாவை வெளியிட்டு இருந்தது. கடந்த பல ஆண்டுகலாக தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி கலெக்ஷன் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இப்போது அது சரிய ஆரம்பித்துள்ளது. இதுவே இப்போது பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

சரியும் தமிழ்நாடு
2026 ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி டேட்டாவின்படி, உத்தர பிரதேசம் 19% வளர்ச்சியுடன் முன்னணி மாநிலமாக உள்ளது. தெலுங்கானா 16%, குஜராத் 15% ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடகா தலா 13%, ஹரியானா 12% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மகாராஷ்டிராவின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி 8% ஆக உள்ளது.
ஆனால் இதற்கு மாறாக தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி -1% ஆக பதிவாகியுள்ளது. அதாவது 2025 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி 1% சரிந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர பிரதேசம் (7% சரிவு). ஒடிசா (7% சரிவு) மாநிலங்களும் சரிந்துள்ளது.
ஜிஎஸ்டி கலெக்ஷன்
ஜிஎஸ்டி கலெக்ஷன் வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக இருந்தாலும், மொத்த ஜிஎஸ்டி வருவாய் அளவில் தமிழகம் தொடர்ந்து நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி கலெக்ஷன் டேட்டாவை எடுத்து பார்த்தால் மகாராஷ்டிரா ₹28,779 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா ₹14,148 கோடி, குஜராத் ₹12,047 கோடி, தமிழகம் ₹10,189 கோடி வருவாயை பதிவு செய்துள்ளது.
ஒரே ஒரு மாதத்தின் டேட்டாவை மட்டும் வைத்து தமிழகத்தின் பொருளாதார நிலையை மதிப்பிட முடியாது என்றாலும், கடந்த சில மாதங்களாகவே ஜிஎஸ்டி கலெக்ஷன் குறைந்து வருவதை புறந்தள்ளிவிட முடியாது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள! கடந்த 2021 செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஏப்ரல் வரையிலும் ஜிஎஸ்டி வருவாய் பாசிட்டிவாகவே இருந்துள்ளது. இடையில் ஓரிரு மாதங்கள் சரிந்தாலும் கூட உடனடியாக அது மீண்டுவிட்டது. அதிகபட்சமாக 2022 ஜூலை மாத வருவாய் 83% அதிகரித்திருந்தது.
6 மாத டேட்டா
கடந்த 6 மாதங்களில் 5 மாதங்கள் ஜிஎஸ்டி கலெக்ஷன் சரிந்துள்ளது. குறிப்பாக மே மாதத்திற்கு பிறகு தொடர்ந்து 4 மாதங்கள் ஜிஎஸ்டி வளர்ச்சி சரிந்துள்ளது. மே மாதத்தில் -15%, ஜூன் மாதத்தில் -2%, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா -1% என ஜிஎஸ்டி கலெக்ஷன் சரிந்துள்ளது.
இது அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார கொள்கைகளில் பிரச்சினை இருப்பதாக பலரும் சாடி வருகிறார்கள். இதை நக்கலடிக்கும் விதமாக பாஜகவிநன் வினோஜ் பி செல்வம், "முதல்வர் விஜய்க்கு நன்றி.. தொழில்துறை அமைச்சர் கீர்த்தணாவுக்கு நன்றி.. நீங்கள் இருவரும் தமிழகத்திற்கு மிக பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளீர்கள்" என நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.
விவாதம்
அவர் மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக முக்கியமான திட்டங்கள் தவெக முறையாக செயல்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஜிஎஸ்டி கலெக்ஷனும் சரிந்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications
