தமிழ்நாட்டில் 16-ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கடுமையான கட்டுப்பாடுகளால் குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் 9-ம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டு இருந்தது.

கட்டுப்பாடுகள்
மக்கள் கூட்டமாக இருப்பதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இறைச்சி, மீன் கடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பணிகளை தொடங்கும்படி பள்ளி கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் திறப்பு
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16-ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும்.

தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன
இம்மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன'' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications