சூப்பர் சிக்ஸ்.. தூய்மைப் பணியாளர்களுக்கு குட் நியூஸ்! தொழில் முனைவோராக மாற்ற "ஏற்றம்" திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:'தூய்மைப்பணியாளரின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு "ஏற்றம்" - தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, வங்கி கடனுடன் 20 சதவீத மானிய உதவி வழங்கப்படும் எனவும், அமைச்சர் வன்னியரசுவின் அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், வருவாய் ஈட்டும் சிறு தொழில் / மாற்றுத் தொழில் செய்ய ஏதுவாக கடன் 20 சதவீதம் மானியம் (ரூ.10,000/- வரை) வழங்கும் "ஏற்றம்" திட்டத்தை செயல்படுத்திட, 3051 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காக 26.10.26 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பில்," தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு, சமூக, கல்வி, சுயதொழில் வசதி. மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தூய்மைப் பணியாளர் நல வாரியம் செயல்பட்டு வருகின்றது.

Sanitation Workers

இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக குடும்பத்தினருக்கு உள்ள கல்வி தூய்மைப் பணியாளர்களின் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன.

தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் அவர்கள் தூய்மைப் பணியாளரின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு "ஏற்றம்" தூய்மைப் பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேற்கூறிய அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வருவாய் ஈட்டும் சிறு தொழில் / மாற்றுத் தொழில் செய்ய ஏதுவாக நுண் கடன் உதவித் திட்டத்தின் மூலம் கடன் 20 சதவீதம் மானியம் (ரூ.10,000/- வரை) வழங்கும் "ஏற்றம்" திட்டத்தை செயல்படுத்திட 3051 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காக அரசாணை (நிலை) எண்.93, சமூக நீதித்(ஆதிந6(1)துறை, நாள்.26.10.2026-இல் ரூ.3,05,10,000/- (மூன்று கோடியே ஐந்து இலட்சத்து பத்தாயிரம் மட்டும்) மானியமாக விடுவித்து தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 18 வயது முதல் 60 வயது வரையுள்ள, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3,00,000/- க்கு கீழ் உள்ள தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயனடைவர். இந்த திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து ஒரு குழுவாகவோ அல்லது தனிப்பட்ட நபர்களாகவோ பயன் பெறலாம்." எனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+