தமிழ்நாடு தான் டாப்.. உள்நாட்டு விமான சேவையில் கலக்கல்.. 2 & 3வது இடங்களில் பெரிய சர்ப்ரைஸ்
சென்னை: இந்தியாவில் விமானச் சேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நாட்டில் எந்த மாநிலத்தில் விரிவான விமானச் சேவை இருக்கிறது என்பது குறித்த டேட்டா வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் விரிவான விமானச் சேவை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான மார்க்கெட் இந்தியாவில் மெல்ல வேகமாக விரிவடைந்து வருகிறது. வெளிநாட்டுப் பயணங்களுக்கு மட்டுமின்றி உள்நாட்டு விமானச் சேவைகளுமே கூட கணிசமாக அதிகரித்தே வருகிறது. இந்தியர்கள் பணத்தை விடச் சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருவது இதில் தெளிவாகத் தெரிகிறது.

விமானங்கள்
இதன் காரணமாகவே இப்போது நமது நாட்டில் உள்நாட்டு விமானச் சேவையில் தினசரி 3,000+ விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் விஷயம் என்னவென்றால் மொத்த உள்நாட்டு விமானச் சேவையில் சுமார் 70% விமானங்கள் 6 பெருநகர விமான நிலையங்களில் ஒன்றிலிருந்து புறப்படுகின்றன. இந்தியா ஒரு பரந்த பன்முகத்தன்மை கொண்ட நாடாக உள்ள நிலையில், எல்லா மாநிலங்களிலும் இன்னும் விரிவான விமானச் சேவை ஏற்படவில்லை.
இதற்கிடையே தற்போது எந்த மாநிலத்தில் விரிவான உள்நாட்டு விமானச் சேவை இருக்கிறது என்பது குறித்த தரவுகளைப் பிரபல ஏவிஷேயன் தளமான நெட்வோர்க்தாட்ஸ் என்ற தளம் வெளியிட்டுள்ளது. மாநிலத்திற்கு உள்ளேயே எத்தனை விமானங்கள் உள்ளன. உதாரணமாகச் சென்னை டூ கோவை, கோவை டூ திருச்சி என்பது போல மாநிலத்திற்குள் எத்தனை விமானங்கள் இயக்கப்படுகிறது என்பதை வைத்து இந்த டேட்டா உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
அதன்படி இந்த லிஸ்டில் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் சுமார் 490 விமானங்கள் இயக்கப்படுகிறது.. இதன் மூலம் சுமார் 55,000க்கும் மேற்பட்ட விமான இருக்கைகளை உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் தூத்துக்குடி என மாநிலம் முழுக்க பரவலாக ஏர்போர்ட்கள் உள்ளன. அதிலும் ஓரிரு விமானங்கள் மட்டும் இல்லாமல்.. விரிவான விமானச் சேவையைக் கொண்டு இருக்கிறது.
கர்நாடகா
இந்த லிஸ்டில் அடுத்த இடத்தில் இருப்பது கர்நாடகா.. அங்குத் தலைநகர் பெங்களூரில் இருந்து மட்டும் வாரத்திற்கு 233 விமானங்கள் இயக்கப்படுகிறது. முன்பு பெங்களூர் மற்றும் மங்களூரில் மட்டுமே விமானச் சேவை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் ஹூப்ளி, பெல்காம், வித்யாநகர், மைசூர் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் விமானச் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
இதில் அடுத்த இடத்தில் வருவது மகாராஷ்டிரா.. இங்கு வாரத்திற்கு 204 வாராந்திர விமானங்கள் மற்றும் 32,538 இருக்கைகள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முறையே சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து இருந்து அதிக விமானங்கள் உள்ளன. ஆனால் மகாராஷ்டிராவில் மும்பை, புனே, நாக்பூர் எனப் பல ஏர்போர்ட்களில் விமானச் சேவை அதிகமாகவே இருக்கிறது.
மேற்கு வங்கம்
இதில் நான்காவது இடத்தில் மேற்கு வங்கம் இருக்கிறது. மேற்கு வங்கத்திற்கு வாரத்திற்கு 99 விமானங்களும் 14,043 இருக்கைகளும் இருக்கிறது. அதேநேரம் அங்கு பெரும்பாலும் கொல்கத்தா மற்றும் பாக்டோக்ரா இடையே மட்டுமே விமானச் சேவை உள்ளன. ஒடிசா, ஆந்திரா, குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் வருகிறது.
-
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications