தமிழ்நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்க போகும் 10.23 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்
சென்னை: தமிழகத்தில் 10.23 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் இன்று ஓட்டுப் போட்டு வருகிறார்கள்.. தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் தங்களுக்கான 39 எம்பிக்களை தேர்வு செய்ய வாக்களிக்க போகிறார்கள்.
தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி. பெண் வாக்காளர்கள் 3.17 கோடியாகும். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 3-ம் பாலினத்தவரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

முதல் முறையாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 10.23 லட்சம் ஆகும். இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 233 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 26 ஆயிரத்து 928 பெண் வாக்காளர்களும் மற்றும் 154 பேர் 3-ம் பாலினத்தவர்கள் உள்பட ஆக மொத்தம் 9 லட்சத்து 18 ஆயிரத்து 315 பேர் வாக்களிக்கின்றனர். கடந்த ஆண்டைவிட 1 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக ஓட்டுப்போடுவதால் முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்களாக சேர்த்து கொள்ளப்படும் நடைமுறை இருந்து வந்தது.. ஆனால் தற்போது, தேர்தல் ஆணையம் இதனை மாற்றி அமைத்துள்ளது.
அதாவது ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய 4 மாதங்களை தகுதி ஏற்பு மாதங்களாக கொண்டு கணக்கிட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. கடந்த 2023 ஆண்டு ஜனவரி நிலவரப்படி புதிய வாக்காளர்களாக 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் புதிதாக 1 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்கள் கடந்த ஓராண்டில் வாக்காளர்களாக பதிவு செய்தனர். இதன் காரணமாக முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 23 ஆயிரம் ஆக உயர்ந்தது. அதேநேரம் தற்போதைய நிலவரப்படி, அதாவது ஏப்ரல் 2-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 18 வயது பூர்த்தி அடைந்திருந்தவர்கள் ஓட்டு போட முடியாது. அவர்கள் வாக்களிக்க ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். தங்களது 23-வது வயதில்தான் லோக்சபா தேர்தலில் ஓட்டு போட முடியும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications