என்ன இப்பவே சூடு பிடிக்குது.. எல்லாப் பக்கமும் வேலையை ஆரம்பித்த அரசியல் கட்சிகள்! பரபர தமிழகம்!
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான களம் இப்போதே சூடாகிவிட்டது. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனு பெற்று வரும் நிலையில், திமுக தனது கதாநாயகனான தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்துள்ளது. விஜய்யும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஐந்து மாதங்களுக்கு முன்பே தமிழ்நாடு தேர்தல் களம் தேர்தல் ஜுரத்தை சந்தித்துள்ளது.
தமிழக அரசியல் களம் சற்றே சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. 2026 தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய கட்சித் தலைவர்கள் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகின்றனர்.
திமுக கூட்டணி ஏற்கனவே பலம் வாய்ந்ததாக இருக்கிறது. பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் அதிக சீட்டுகள் வேண்டுமென காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன.

2026 சட்டசபை தேர்தல்
ஆனால் அது கூட்டணியில் பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தாது எனச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக ஆளும்கட்சியாக வேண்டும் எனத் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணியை அமித்ஷா இறுதி செய்துவிட்டார். 2021ஐ போலவே 2026லும் பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. மேலும் அந்த தேர்தலில் கூட்டணியிலிருந்து பாமகவை அழைத்து வர எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாகப் பேசி வருகிறார்.
தமிழக அரசியல் களம்
மறுபுறம் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி இருக்கிறார் சீமான். மக்களை சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டை போக்க தீவிரமாக பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார் விஜய். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் பொதுவெளியில் முதன் முறையாக விஜய் மக்களை சந்திக்கிறார். இது ஒரு புறம் இருக்க தமிழ்நாடு தேர்தல் களம் இப்போதே சூடாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு இன்னும் சில மாத இடைவெளி இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வேலைகளை துவக்கி விட்டன.
திமுக தேர்தல் பணிகள்
ஆளும் கட்சியான திமுக பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் வேலைகளை துவங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கேஎன் நேரு -உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் திமுக கதாநாயகனான தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கனிமொழி எம்பி தலைமையிலான இந்த குழுவில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கின்றனர்.
அதிமுக விருப்பமனு
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. கூட்டணி அமைக்கும் வேலைகளை பாஜக பார்த்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுகவினரிடம் விருப்பமனுக்களை பெற்று வருகிறது அதிமுக. தலைமை மூன்று நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இதுவரை மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்தி விருப்பமனுகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சில கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் கூட அதிமுகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து இருக்கிறது.
பாமக தீவிரம்
மறுபுறம் பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே குடும்ப தகராறு இருக்கிறது. அந்த தகராறு கட்சியிலும் எதிரொலித்திருக்கும் நிலையில், நான் தான் தலைவர் என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் தேர்தல் ஆணையம் தங்களைத்தான் அங்கீகரித்து இருப்பதாக கூறி அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறார் அன்புமணி. உச்சமாக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களையும் பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்வத்தோடு விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.
சீமான் வேட்பாளர் அறிவிப்பு
அடுத்ததாக ஏற்கனவே தமிழக தேர்தல்களில் பலமுறை களம் கண்ட சீமான், இந்த முறையும் தனித்து களம் காண்பதென முடிவு செய்திருக்கிறார். இதற்காக வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார். பொதுவாக பல கட்சிகள் தேர்தல் நேரம் வரை காத்திருந்து கூட்டணி பங்கீடு முடிவடைந்தது தான் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்கள். ஆனால் வழக்கம்போல் முதல் ஆளாக வேட்பாளரை பட்டியலை அறிவித்து, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் என பிரம்மாண்டம் காட்டி வருகிறார் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் அரசியல் பிரச்சாரம்
மற்றொரு புறம் தேர்தல் வேலைகள் என தனியாக துவக்காவிட்டாலும் கள அரசியலில் தனது முத்திரையை ஆழமாக பதித்து வருகிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். இதுவரை ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்யப்படவில்லை என்றாலும், விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் சேருவது அவர் தரப்பை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் விஜய் கால்பதிக்க திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை முன்பே திட்டமிட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கரூர் சம்பவத்தால் 70 நாட்களுக்கும் மேலாக தடைப்பட்டது .தற்போது நிலைமை ஓரளவு சீராகி இருக்கும் நிலையில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை பிரச்சாரம் போல மேற்கொண்டு வருகிறார்.இதுவரை மாவட்ட அரசியல் பேசாத விஜய் காஞ்சிபுரத்திலிருந்து உள்ளூர் அரசியலையும் பேச ஆரம்பித்திருப்பது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
-
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை!












Click it and Unblock the Notifications