சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் தமிழகத்தில் 2710 பேருக்கு கொரோனா.. 37 பேர் பலி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இதுவரை, இல்லாத அளவாக இன்று ஒரே நாளில், 2710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை வீடியோ வாயிலாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜயபாஸ்கர். அப்போது அவர் வெளியிட்ட இன்றைய கொரோனா தொடர்பான புள்ளி விவரத்தில் என்ன கூறியுள்ளது என்பதை பாருங்கள்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,087ஆக உயர்ந்துள்ளது.

கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் சொன்னதில் தவறு இல்லை.. ஸ்டாலினுக்கு ஏன் கோபம்- விஜயபாஸ்கர்கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் சொன்னதில் தவறு இல்லை.. ஸ்டாலினுக்கு ஏன் கோபம்- விஜயபாஸ்கர்

 சென்னை நிலவரம்

சென்னை நிலவரம்

இன்று ஒரே நாளில் சென்னையில் பாதிக்கப்பட்டோர் 1487 பேராகும். பிற மாவட்டங்களில், கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 37 பேர் பலியாகியுள்ளனர்.

 கொரோனா பலி

கொரோனா பலி

இதில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 30 பேர் அரசு மருத்துவமனைகளிலும் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 794 என்ற அளவில் அதிகரித்துள்ளது.

 பரிசோதனை

பரிசோதனை

இன்று ஒரே நாளில், தமிழகத்தில், 26,592 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம், 9,19,204 பேருக்கு தமிழகத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

 டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

9 லட்சத்திற்கு அதிக பரிசோதனை செய்துள்ளோம். மருந்து அல்லது தடுப்பூசி இல்லாத ஒரு நோய்க்கு, சிகிச்சையளித்து வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 34,112 பேர். இன்று மட்டும், மருத்துவமனைகளிலிருந்து 1358 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

English summary
Tamil Nadu district wise break up of 2710 new cases of Covid19 reported today and details of active cases, discharge and death toll so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X