எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங்: தரவரிசை பட்டியல் வெளியானது.. முதல் 9 இடங்களிலும் மாணவர்கள் தான்!
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசையில் நெல்லை மாணவர் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். சேலம் மாணவர் அபினீத் நாகராஜ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இவை தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன.
மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
அதன்படி, நடப்பு ஆண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதற்கான ஆன்லைன் வழி விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய கடந்த 29 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த வகையில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், அரசு ஒதுக்கீட்டுக்கு 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்தனர். மொத்தம் 72,943 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியலை இன்று கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசையில் நெல்லை மாணவர் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 665 மதிப்பெண்கள் பெற்றவர். சேலம் மாணவர் அபினீத் நாகராஜ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சேலத்தை சேர்ந்த ஹருதிக் விஜயராஜா தரவரிசைப் பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ளார்.
திருவள்ளூர் மாணவர் ராகேஷ் 4வது இடத்தையும், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.தரவரிசையில் முதல் 9 இடங்களை மாணவர்களே பிடித்துள்ளனர். 10வது இடத்தில் மாணவி ஒருவர் உள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி துவங்குகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவ படிப்பில் சேர 7.5சதவீத இட ஒதுக்கீட்டில் 4,281 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 4,062 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 39,853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளது." என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications