சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தாக்கினாலும் பயமில்லை மீண்ட 41,357 பேர் தரும் நம்பிக்கை

கொரோனா தாக்கினாலே உயிரிழந்து விடுவோம் என்ற பயம் வேண்டாம் கொரோனா பாதித்தவர்களில் சிகிச்சை பெற்று தமிழ்நாட்டில் 41,357 பேர் மீண்டிருக்கின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகியிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தினாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவது ஆறுதலைத் தருகிறது.

தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட கொரோனாவால் உயிர்தேசம் அதிகம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷாக் தந்த சென்னை.. தமிழகத்தில் மோசமாகும் நிலை.. இன்று 3645 கொரோனா கேஸ்கள்.. பாதிப்பு 74622 ஆக உயர்வுஷாக் தந்த சென்னை.. தமிழகத்தில் மோசமாகும் நிலை.. இன்று 3645 கொரோனா கேஸ்கள்.. பாதிப்பு 74622 ஆக உயர்வு

கொரோனா பாதிப்பு எவ்வளவு

கொரோனா பாதிப்பு எவ்வளவு

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 74,622ஆக உயர்ந்துள்ளது. பல மாவட்டங்களிலும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,690ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பு எப்படி

பாதிப்பு எப்படி

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3,009 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 350 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 258 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 2,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்கள் அதிகம்

குணமடைந்தவர்கள் அதிகம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் 3 நாட்களில் கொரோனா தொற்று கடுமையாக உயர்ந்த 8 மாவட்டங்கள்
    தன்னம்பிக்கை தேவை

    தன்னம்பிக்கை தேவை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 55.42% ஆக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கினாலே உயிரிழந்து விடுவோம் என்று பயந்துவிடக்கூடாது. தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்கொண்டு சத்தான உணவுகளை சாப்பிட்டு மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை கடைபிடித்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விடலாம் என்று அந்த நோயில் இருந்து மீண்டுள்ள 41ஆயிரம் பேர் தரும் நம்பிக்கையாகும்.

    English summary
    Tamil Nadu’s recovery rate has increased 41,357 persons discharged after treatment for COVID-19 till now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X