சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தாக்கினாலும் பயமில்லை எளிதில் மீளலாம் - தமிழ்நாட்டில் 30,271 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனா தாக்கினாலே உயிர் போய் விடும் என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கொரோனா தாக்கியவர்களுக்கு தரமான சிகிச்சையும் சத்தான உணவுகளும் கிடைத்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்தால் நிச்சயம் குணமடையலாம் என்று நம்பிக்கை தருகின்றனர் மருத்துவர்கள். கொரோனா தாக்கியவர்களில் இதுவரை 30 ஆயிரத்து 271 பேர் குணமடைந்துள்ளனர் என்று அரசு வெளியிட்ட புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் சீனாவில் பரவத்தொடங்கியது. பல நாடுகளில் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிரை குடித்த கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது வீரியத்தை அதிகரித்து உள்ளது. நூற்றுக்கணக்கில் பரவிய கொரோனா தொற்று தற்போது ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 2115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 54,448 ஆக அதிகரித்துள்ளது. உள்ளூர்காரர்கள் மட்டுமல்லாது வெளிநாடு, வெளிமாநிலங்களில் வந்தவர்களும் நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். வைரஸ் பரவாமல் இருக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லாக் டவுன் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

உயிரிழந்தவர்கள் எத்தனை

உயிரிழந்தவர்கள் எத்தனை

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனைகளில் 23,509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666ஆக அதிகரித்துள்ளது.

மீண்டவர்கள் எண்ணிக்கை

மீண்டவர்கள் எண்ணிக்கை

கொரோனா பாதித்தவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருவதால் ஒரே நாளில் 1630 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 30,271 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை பற்றி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

சென்னையில் 21,098 பேர் குணமடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,755 பேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 514 பேரும் அரியலூரில் 384 பேரும் குணமடைந்துள்ளனர். கோவையில் 161, கடலூர் மாவட்டத்தில் 475பேர் குணமடைந்துள்ளனர். தர்மபுரியில் 15 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தில் 198 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 72 பேரும், கள்ளக்குறிச்சியில் 284 பேரும் நோய் பாதிப்பில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.

குணமடைந்தவர்கள்

குணமடைந்தவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 91பேர், கரூர் மாவட்டத்தில் 85 பேர், கிருஷ்ணகிரியில் 30 பேர், மதுரையில் 345 பேர் குணமடைந்துள்ளனர். நாகையில் 41 பேர், நாமக்கல் மாவட்டத்தில் 82 பேர் நீலகிரியில் 14 பேர், பெரம்பலூரில் 144 பேர் புதுக்கோட்டையில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். புதுக்கோட்டையில் 31 பேர் ராமநாதபுரத்தில் 101 பேர், ராணிப்பேட்டையில் 122 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் குணம்

கொரோனா பாதிப்பில் குணம்

சேலம் மாவட்டத்தில் 200 பேரும் சிவகங்கையில் 49 பேரும் தென்காசியில் 98 பேரும் தஞ்சாவூரில் 118 பேரும் குணமடைந்துள்ளனர். தேனியில் 123 பேரும், திருப்பத்தூரில் 38 பேரும் திருவள்ளூரில் 1130 பேரும் குணமடைந்துள்ளனர். திருவண்ணாமலையில் 440 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

விமான நிலைய கண்காணிப்பு

விமான நிலைய கண்காணிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 75 பேர், தூத்துக்குடியில் 347 பேரும் திருநெல்வேலியில் 400 பேரும் திருப்பூரில் 115 பேரும் திருச்சியில் 142 பேரும் வேலூரில் 81 பேரும் விழுப்புரத்தில் 384 பேரும் விருதுநகரில் 12 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள். விமான நிலைய கண்காணிப்பில் இருந்து 148 பேரும், ரயில் நிலைய கண்காணிப்பில் இருந்து 189 பேரும் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரை 30,271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா எப்போது ஒழியும்

கொரோனா எப்போது ஒழியும்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை தாங்களே தற்காத்துக்கொள்வது அவசியம். நோய் தாக்காமல் தப்பிக்க முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆரோக்கியமான சத்தான உணவுகளை உண்ணவேண்டும். இந்த நோய் எப்போது ஒழியும் என்று எவராலும் சொல்ல முடியாது என்பதால் அவசியமான பணிகள் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வராமல் கூடுமானவரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

English summary
Tamil Nadu’s recovery rate has increased 30,271 persons discharged after treatment for COVID-19 till now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X