2 மாஸ்டர் மைண்டுகளை தூக்கிய மத்திய அரசு! டெல்லிக்கு போகும் தமிழ்நாட்டின் 2 டாப் ஐஏஎஸ் அதிகாரிகள்!
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த 2 டாப் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக இந்திய ஆட்சி பணிக்கு ஒருவர் தேர்வான பின் அவருக்கு இரண்டு இடங்களில் பொறுப்புகள் வழங்கப்படலாம். ஒன்று ஒன்றிய பொறுப்பு. அல்லது மாநில பொறுப்பு. ஒன்றிய பொறுப்பு ஒன்றால் மத்திய அரசின் பணியில் ஐஏஎஸ் அதிகாரி தேர்வு செய்யப்படலாம்.

அதே சமயம் சிலர் மாநில அரசு பணிக்கு பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்படலாம். உதாரணமாக செயலாளர், மாவட்ட ஆட்சியர், மற்ற துறை தலைவர் என்று பல பொறுப்புகளில் நியமிக்கப்படலாம். அதேபோல் ஒன்றிய பணிக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகளும் மத்திய அரசின் பல பணிகளுக்கு தேர்வாக வாய்ப்புகள் உள்ளன.
மாநில அரசு பணி: இப்படி மாநில அரசு பணிக்கு தேர்வாகும் ஒருவரை மத்திய அரசு பணிக்கு அழைக்க முடியும். உள்துறை அமைச்சகம் இவரை அழைக்கும் பட்சத்தில் அதற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். சில சமயங்களில் அதிகாரிகளை மாற்றுவதில் குழப்பம் ஏற்படும்.
உதாரணமாக மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாவை மாநில பணியில் இருந்து விடுவித்து மத்திய பணிக்கு அனுப்பி வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதோடு தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா டெல்லி உள்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டது. மாநில பணியில் இருக்கும் ஒருவரை, அதுவும் தலைமை செயலாளர் ஒருவரை இப்படி மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது பெரிய சர்ச்சையானது.
ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அனுப்ப முடியாது. இங்கு கொரோனா, யாஸ்ஸ் புயல் என்று நிலைமை சரியில்லை. என்ன நடந்தாலும் ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அனுப்பி முடியாது. தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அழைப்பது தவறான உதாரணமாகும், இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது, என்று கூறினார். இந்த மோதல் மோசமான நிலையில் ஆலன் பந்தோபத்யா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
டெல்லி செல்லும் அதிகாரிகள்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 2 டாப் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் டாப் செயலாளர்களாக இருக்கும் 2 பேர் டெல்லி செல்ல அழைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இரண்டு பேருமே தற்போது தமிழ்நாட்டில் மிக பெரிய செயலாளர் பதவிகளில் இருக்கின்றனர். முக்கியமான சில துறைகளே அவர்களுக்கு கீழ்தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் டாப் சாய்ஸ் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு பேருமே தற்போது டெல்லிக்கு மத்திய பணிக்கு செல்ல இருக்கின்றனர். தமிழக அரசு இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சக முடிவை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை.
மத்தியில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஆட்சி மாற்றம் கூட ஏற்படலாம் என்று பேச்சுகள் வரும் நிலையில் 2 டாப் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி போவது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications