சென்னை நோக்கி வந்த சிகப்பு தக்காளிகள்.. இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன்
Recommended Video
சென்னை: சென்னையை நோக்கி நகர்ந்த சிகப்பு தக்காளிகள்தான், நேற்றைய மழைக்கு காரணம் என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.
சென்னையில் நேற்று மாலை திடீரென வானம் மேக மூட்டத்தோடு மாறி, இடியுடன் கூடிய நல்ல மழையை பெற்றது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
புயல் போல வரும் இந்த மழைக்கு, தமிழ்நாடு வெதர்மேன் வைத்துள்ள செல்லப் பெயர் சிகப்பு தக்காளி. வெப்ப நிலை மாற்றம், வளி மண்டல மாற்றம் போன்றவை சிகப்பு தக்காளிகள் உருவாக காரணம். சிகப்பு வண்ணத்தில் தக்காளி போல காணப்படும் மேக மூட்டத்தின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், மழை இன்றும் தொடரும் என்று லேட்டஸ்ட் போஸ்ட் ஒன்றில் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். இதுகுறித்து முகநூலில் அவர் இன்று வெளியிட்டுள்ள தகவல் பல மாவட்ட மக்களுக்கும் வாவ் சொல்ல வைக்கும் ரகம்தான். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மழைப் பொழிவு இருக்கப்போகிறது என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.
சென்னை மண்டலம்
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை (கே.டி.சி பெல்ட்), சிவகங்கை-புதுக்கோட்டை-தஞ்சாவூர் பெல்ட் மற்றும் சேலத்திலும் மழை பெய்யும். அருகிலுள்ள திண்டுக்கல்லின் சில பகுதிகள், மதுரை, ராமநாதபுரம், ஈரோடு, பெரம்பலூர்-அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் பகுதிகளிலும் மழை பெய்யும்.
சென்னை வானிலை
அதேநேரம், நினைவில் கொள்ளுங்கள், நேற்று போல, இன்றும் பரவலான மேகங்களை எதிர்பார்க்க முடியாது. இன்று கே.டி.சியின் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்) மண்டலத்தின் சில பகுதிகளில் மழை பெய்யாது. கே.டி.சியின் சில பகுதிகளுக்கு மழை பெய்யும். பட்டியலிடப்பட்ட பிற மாவட்டங்களுக்கும் இது பொருந்தும். மேகங்கள் உருவான பின்னரே நாம் அதைக் கண்டறிய முடியும். இப்போது வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதை மட்டுமே சொல்ல முடியும்.

சேலம், பெங்களூர்
சேலத்தில் மழை பெய்ய உள்ள நிலையில், அதன் தாக்கத்தால், பெங்களூரிலும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. ஆந்திராவின் சித்துர்-நெல்லூர் பெல்ட் பகுதியில் கூட மழை பெய்ய நல்ல் வாய்ப்பு உள்ளது. இன்று காலை 8.30 மணி வரையிலான மழை அளவு (மிமீ) திருவள்ளூர் - 36, சோளவரம் ஏரி - 31, செம்பரபாக்கம் ஏரி - 29, திருவாலங்காடு - 28, பூவிருந்தமல்லி - 26, அம்பத்தூர் - 25, அயனவரம் - 20, தம்பரம் ஐ.ஏ.எஃப் - 20, பெரம்பூர் - 18, தரமணி - 7, ஆலந்தூர் - 6, மீனம்பாக்கம் - 6 மழை பதிவாகியுள்ளது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications