பிளஸ் 2 ரிசல்ட்.. "ஆல் பாஸ் போட்டும்" மாணவர்களை விட மாணவிகள்தான் அதிகம் தேர்ச்சி.. அடடே!
சென்னை: தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கொரோனா காலமென்பதால் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் ஆல் பாஸ் செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
ஆல் பாஸ் செய்த போதிலும் கூட மாணவர்களை விட, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பாஸ் செய்துள்ளனர் என்பது இதில் ஒரு சுவாரசியம் அம்சமாகும்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.

மதிப்பெண்கள்
மதிப்பெண்கள் இரண்டு தசம எண்கள் மூலமாக கணக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 22 ஆம் தேதி முதல் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களின் செல்போன் குறுந்தகவல் மூலமாக மதிப்பெண்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மதிப்பெண் திருப்தி
இந்த வருடம் யாருமே 600க்கு 600 மதிப்பெண்கள் முழுமையாக எடுக்கவில்லை. அதேநேரம் 551 முதல் 600 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 39 ஆயிரத்து 679 பேர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மதிப்பெண் போதாது என்பவர்கள் வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு கொரோனா பரவலை பொறுத்து தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும்.

மாணவிகளே அதிகம் பாஸ்
பொதுவாக, 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைவது வழக்கம். நீண்ட நெடுங்காலமாக இது ஒரு மரபு மாதிரி மாறிவிட்டது. தமிழக கல்வி சூழ்நிலையில் பொதுவாக மாணவிகள் சிறப்பாக கல்வி பயில கூடியவர்கள், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசை உள்ளவர்கள் என்பது இதற்கு காரணம் என்பார்கள் கல்வியாளர்கள்.

ஆல் பாஸ் அறிவிப்பு
இந்த முறை அனைத்து மாணவர்களும் அதாவது தேர்வு எழுதிய 8,16,473 மாணாக்கர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டு உள்ள நிலையிலும் கூட மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி அடைந்து உள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். இது எப்படி சாத்தியம். இதுதான் விவரம்.

மாணவிகள் அதிகம் பாஸ் எப்படி?
தேர்வு எழுதிய அடிப்படையில் மாணவர்கள் எண்ணிக்கை மாணவிகள் எண்ணிக்கையை விட குறைவு. மாணவர்கள் 3,80,500 பேரும், மாணவிகள் 4,35,973 பேரும் தேர்வு எழுதினர். அனைவருமே ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இயல்பாகவே, மாணவிகள்தான் அதிக தேர்ச்சியடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 பேர் தேர்ச்சி பெறவில்லை. கொரோனா காலத்திலாவது, இந்த மாணவர்கள் சாதனையை முறியடிப்பார்கள் என்று பார்த்தால், இப்போதும் மாணவிகளே, வெற்றிக் கொடி நாட்டி சாதித்துள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications