அடுத்த 10 ஆண்டுகளில்.. தமிழ்நாடு முழுக்க 1,000 தடுப்பணைகள்.. பட்ஜெட்டில் பிடிஆர் முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் புதிய பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று இ பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். தமிழ் மொழி வளர்ச்சி, காவல்துறைக்கு நிதி ஒதுக்கீடு, காலநிலை மாற்றம், சாலை பாதுகாப்பு என்று பல்வேறு விஷயங்களுக்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டது ,
முக்கியமாக தமிழ்நாட்டில் நீர் நிலைகள் குறித்தும், நதிகள் குறித்தும் முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

பட்ஜெட்
பட்ஜெட் உரையில் நீர் நிலைகள் குறித்து பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும். குளங்கள், ஏரிகள், நதிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு பாதுகாப்படும். மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்த்தேக்க அளவு பழைய நிலைக்கு கொண்டுவரப்படும்

மாநிலம்
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் திட்டத்தை செயல்படுத்த கேரளாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். ஆண்டின் தொடக்கத்தில் 50 குறு நீர்ப்பாசன குளங்களை தரப்படுத்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். குளங்களை தூர் வாருவதற்கு ரூ. 111 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜல் ஜீவன் திட்டம்
ரூ.2000 கோடியில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும். பாசன திட்டங்களுக்கு ரூ6607 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது முக்கிய ஆறுகளின் மேல், கீழ் பகுதிகளில் நிரந்தர நீர் தர கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும்.
Recommended Video

குடிநீர்
79395 குக்கிராமங்களுகளில் ஒருநபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் . எல்லோருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு ஈர நிலங்கள் பாதுகாப்பிற்கு 150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறதும் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்று தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications