"ஸ்டிரிக்ட்".. 4 மாவட்டங்களில் தொடங்கிய பஸ் பயணம்.. பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் பேருந்து பயணம் தொடங்கிய நிலையில், பயணிகள் என்னென்ன விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சரிய தொடங்கி உள்ள நிலையில், லாக்டவுனில் தொடர்ந்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா கேஸ்கள் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும், அதிகமாக உள்ள மாவட்டங்களில் குறைவான தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் மக்கள் எளிதாக வெளியே செல்லும் வகையிலும், பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து பயணம் தொடங்க உள்ளது.

பேருந்து
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மாவட்டங்களுக்கு உள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைவாக இருந்ததாலும், பொருளாதார நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்பதாலும் இங்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து பயணம் தொடங்க உள்ள நிலையில், இங்கு மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்று விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பேருந்தில் என்னென்ன விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

விதிமுறைகள்
அதன்படி பேருந்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் இல்லை என்றால் அனுமதி இல்லை.
பேருந்தில் 50 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
2 பேர் அமரக்கூடிய இருக்கையில் 1 நபர் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்படும்.

திருநங்கைகள்
பயணிகள் உள்ளே வந்ததும் கையில் கிருமி நாசினி செலுத்தப்படும்.
இலவச பயணம் மேற்கொள்ளும் திருநங்கைகள் ஐடி கார்ட் காட்ட வேண்டும்.
இலவச பயணம் மேற்கொள்ளும் மாற்று திறனாளிகள் ஐடி கார்ட் காட்ட வேண்டும்

வேக்சின்
இரண்டாம் அலை முடிந்துள்ள நிலையில், மூன்றாம் அலை தொடங்க வாய்ப்புள்ளதால் மக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 85% ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் போடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications