சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எகிறிய சீமான்.. அண்ணாமலைக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை! டிஜிட்டல் மீடியா சங்கம் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியில் தனது உறவினருக்கு சீட் வழங்கியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை பைத்தியம் என கடுமையாக விமர்சித்த சீமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் சீமானுக்கு வித்தியாசம் இல்லை என்று சாடி உள்ளது.

நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், அவரது மைத்துனருக்கு தேர்தலில் சீட் வழங்கியது குறித்தும், சவுக்கு சங்கரின் பேச்சு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது, தன்னை நோக்கி கேள்வி எழுப்பிய அந்த செய்தியாளரிடம் ஒருமையில் பேசியதுடன், "பைத்தியக்காரன்" என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு கடும் கண்டனத்திற்கு ஆளானது.

கோபத்தில் கொந்தளித்த சீமான்.. மைத்துனரை இழுத்த செய்தியாளரிடம் தரக்குறைவாக பேச்சு - சிஎம்பிசி கண்டனம் கோபத்தில் கொந்தளித்த சீமான்.. மைத்துனரை இழுத்த செய்தியாளரிடம் தரக்குறைவாக பேச்சு - சிஎம்பிசி கண்டனம்

கண்டித்த சிஎம்பிசி

கண்டித்த சிஎம்பிசி

பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் சீமானின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம், "சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர் கரிகாலனை தரக்குறைவாக பேசி, மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநாகரீக போக்கை அவர் கைவிட வேண்டும். உடனே மன்னிப்பும் கேட்க வேண்டும்." என்று கண்டித்து உள்ளது.

கண்டித்த சிஎம்பிசி

கண்டித்த சிஎம்பிசி

பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் சீமானின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம், "சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர் கரிகாலனை தரக்குறைவாக பேசி, மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநாகரீக போக்கை அவர் கைவிட வேண்டும். உடனே மன்னிப்பும் கேட்க வேண்டும்." என்று கண்டித்து உள்ளது.

டிஜிட்டல் ஊடக சங்கம்

டிஜிட்டல் ஊடக சங்கம்

அதேபோல், தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டு உள்ள கண்டன அறிக்கையில், "பத்திரிகையாளர் திரு. கரிகாலன் அவர்களைத் தரக்குறைவாகப் பேசிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை, தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒருமையில் பேசியதற்கு கண்டனம்

ஒருமையில் பேசியதற்கு கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், இன்று (23 12 2022) அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ROOTS TAMIL ஊடகத்தின் செய்தியாளர் திரு.கரிகாலன் கேள்வி எழுப்பிய போது, இடைநிறுத்தி தகாத வார்த்தைகளிலும் ஒருமையிலும் பேசியது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலைக்கும் சீமானுக்கு வித்தியாசமும் இல்லை

அண்ணாமலைக்கும் சீமானுக்கு வித்தியாசமும் இல்லை

மேலும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு உள்நோக்கம் கற்பிக்கும் மனநிலை மிக மோசமானது. சமீப காலமாக ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து இதுபோல அவமதிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. பிஜேபி மாநிலத் தலைவர் திகு. அண்ணாமலை அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு விலை பேசி எலம் விட்டதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சீமான் வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தல்

சீமான் வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தல்

ஆகவே, சீமான் அவர்களது இந்தச் செயலை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கேள்விகளே நம்மைச் செதுக்கும்" என மேடைகளில் பேசும் திரு. சீமான் அவர்கள், அதற்குத் தகுந்தாற்போல நடக்கும் வகையில், தன்னுடைய செயல்பாட்டிற்கு வருந்தத்தைப் பதிவு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டு இருக்கிறது.

English summary
The Tamil Nadu Digital Media and Journalists Association, which has insisted that Seeman should express his remorse, for criticizing the journalist who pointed out that Naam Tamilar Party had given seats to his cousin and said that Seeman has no difference than Tamil Nadu BJP president Annamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X