பனை மரம் ஏற சிறந்த கருவியை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!
சென்னை: பனை மரம் ஏறுவதற்கு வசதியாக சிறந்த கருவியை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், 10 லட்சம் பனை விதைகளை விநியோகம் செய்வதற்கும், பனங்கற்கண்டு தயாரிப்பு தொடர்பாக 250 பனை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், பனையோலைப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கும் அரசு ரூ.2.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பான முழு விவரம் வருமாறு;

பனை மரம்
நமது மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவித்து, பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், 76 லட்சம் பனை விதைகளும், ஒரு இலட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம், பனைப் பொருட்களை மதிப்புக்கூட்டுவதற்கான நவீன இயந்திரங்கள் விநியோகம், அரசு நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை, பனை மரங்களில் ஆராய்ச்சி என பல்வேறு பணிகளுக்காக அரசு நடவடிக்கை எடுத்தது.

ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
நடப்பு 2022-23 ஆம் ஆண்டிலும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 10 இலட்சம் பனை விதைகளை விநியோகம் செய்வதற்கும், பனையேறும் சிறந்த இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருதளிப்பதற்கும், 50 சதவிகித மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கும், 50 சதவிகித மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும், பனை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் கருவிகள் வழங்குவதற்கும் தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பு தொடர்பாக 250 பனை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், பனையோலைப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

சிறந்த கருவி
இதன் தொடர்ச்சியாக, பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, எவ்வித ஆபத்துமில்லாமல், எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினைக் கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ளலாம்.

தேர்வுக் குழு
பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது. இக்குழுவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து தோட்டக்கலைத்துறையின் பேராசிரியர், வேளாண் பொறியியல் துறையின் பேராசிரியர், தோட்டக்கலை கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் அலுவலர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.

எப்படி விண்ணபிக்கலாம்
இத்தகைய கருவியினைக் கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவினம், கருவியின் செயல்திறன், இதற்கான விலையின் உண்மைத்தன்மை, இயந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான நபர் தேர்வு செய்யப்படுவார்.இந்த விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ளவிரும்பும் நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications