சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Lockdown: நாளையே மீட்டிங் போடும் முதல்வர் ஸ்டாலின்.. தமிழ்நாட்டில் இரவு நேர, ஞாயிறு ஊரடங்கு ரத்து?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மற்றும் லாக்டவுன் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளார். முக்கிய உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருக்கிறார்.

இந்தியாவில் பல்வேறு பெருநகரங்களில் கடந்த 10 நாட்களாக கொரோனா கேஸ்கள் குறைந்து வருகிறது. டெல்லி, மும்பையில் கொரோனா மூன்றாம் அலை உச்சம் கடந்துவிட்டதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் முழுமையாக கொரோனா கேஸ்கள் குறையவில்லை. தொடர்ந்து 30 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.

ஞாயிறு முழு லாக்டவுன்... திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் வாசலில் நடந்த திருமணங்கள் ஞாயிறு முழு லாக்டவுன்... திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் வாசலில் நடந்த திருமணங்கள்

கொரோனா தமிழ்நாடு

கொரோனா தமிழ்நாடு

வரும் நாட்களில் தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் சரியும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜனவரி இறுதியில் கொரோனா கேஸ்கள் உச்சம் தொடலாம் என்று ஏற்கனவே ஐஐஎஸ்டி ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்பின் கேஸ்கள் குறையும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 2,11,270 பேர் ஆக்டிவ் கொரோனா நோயாளிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று 30055 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 31,94,260 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 தமிழ்நாடு ஊரடங்கு

தமிழ்நாடு ஊரடங்கு

தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தளர்வுகளுடன் கூட லாக்டவுன் ஆகும். தற்போது இரவு நேர லாக்டவுன் மாநிலம் முழுக்க அமலில் உள்ளது. மேலும் ஞாயிறு முழு லாக்டவுன் அமலில் உள்ளது. மேலும் சினிமா தியேட்டர்களில் 50 சதவிகித கூட்டம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. முந்தைய வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டன.

தமிழ்நாடு லாக்டவுன்

தமிழ்நாடு லாக்டவுன்

ஆனால் மக்கள் இதனால் கடுமையாக அவதிப்பட்டனர். இதையடுத்து கடந்த கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதோடு தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் கேஸ்கள் உயர்ந்த நகரங்களில் எல்லாம் தற்போது கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மூன்றாம் அலைக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது, என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

நாளை ஆலசோனை

நாளை ஆலசோனை

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மற்றும் லாக்டவுன் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள், முக்கிய உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருக்கிறார். லாக்டவுன் தளர்வுகள் தொடர்பாக இதில் ஆலோசனைகள் செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு கொரோனா கேஸ்கள் தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

தளர்வு வருமா ?

தளர்வு வருமா ?

இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் இரவு நேர லாக்டவுன், ஞாயிறு லாக்டவுன் தளர்வு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை விட அதிக கேஸ்கள் பதிவாகும் கர்நாடகா , மகாராஷ்டிராவில் இந்த மாதத்திற்கு பின் ஞாயிறு லாக்டவுன் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மஹாராஷ்டிராவில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டிலும் தளர்வுகள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

    மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. டாஸ்மாக் கடைகள் மூடல்? அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்
    தமிழ்நாடு தளர்வுகள்

    தமிழ்நாடு தளர்வுகள்

    அதன்படி தமிழ்நாட்டில் இந்த மாத இறுதிக்கு பின் இரவு நேர லாக்டவுன், ஞாயிறு லாக்டவுன் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இது தொடர்பான அறிவுரைகள் முதல்வருக்கு அதிகாரிகள் மூலம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 31ம் தேதி நடப்பில் உள்ள லாக்டவுன் முடிய உள்ள நிலையில், பிப்ரவரியில் அதிக தளர்வுகளுடன் கூடிய லேசான ஊரடங்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Tamilnadu lockdown may get more relaxations soon as CM Stalin to hold a meeting tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X