ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இலவச உணவு.. ஆரம்பத்திலேயே அசத்தும் அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஊரடங்கு முடியும் வரையில் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
திருக்கோயில்கள் சார்பில் தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிருபர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

24 மணி நேரமும் உணவு
முழு ஊரடங்கு காலத்தில் கொரோனா காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும், பிற நோய்களால் அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் அவர்களைக் காண வருபவர்களுக்கும் 24 மணி நேரமும் உணவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

தனியார் அமைப்பு
இதற்காக மாதந்தோறும் ஒரு நாள் இலவச உணவு வழங்கி வரும் 'சங்கமித்ரா' என்னும் தனியார் அமைப்பினைத் தொடர்புகொண்டு இந்த கோரிக்கையை விடுத்தோம்.எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தனியார் அமைப்பு, இலவச உணவை வழங்க முன்வந்தது. அதன்படி, 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கட்சி சார்பில் மக்களுக்கு உதவி
ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்வதோடு, கட்சி சார்பாகவும் மக்களுக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

கோயில்களில் உணவு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ' கோயில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் நிலையில் , கொரோனா பாதிப்பு குறையும் வரை இவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளோம். ஒரு லட்சம் பேருக்கு தினமும் 30 லட்சம் ரூபாய் செலவில் மதிய உணவு வழங்கப்படுவதுடன் கபசுரக் குடிநீர், மாஸ்க் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்" என்றார்.
-
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்!












Click it and Unblock the Notifications