சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை விரட்டும் ரசம்.. அமெரிக்கர்களுக்கு உணவின் மகத்துவத்தை புரிய வைத்த அரியலூர் அருண்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவுக்கு எதிர்ப்புசக்தியை அளித்து வரும் தமிழகத்தின் ரசம் மெனு அமெரிக்காவை கலக்கி வருகிறது. தமிழரின் பாரம்பரிய உணவின் மகத்துவத்தை அமெரிக்கர்களுக்கு புரியவைத்த அரியலூர் தமிழரின் புகழ் வெகுவாக பரவி வருகிறது.

Recommended Video

    POSITIVE STORY கொரோனாவை விரட்டும் அற்புத ரசம்.. அமெரிக்காவை கலக்கும் அரியலூர் இளைஞர்…!

    உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று அமெரிக்காவை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் நியூயார்க், நியூஜெர்சி, பிரின்ஸ்டன் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கொரோனாவை வெற்றி கொண்டனர். இதன் பின்னணியில் இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த சமையற் கலைஞர் அருண் ராஜதுரை என்பது தெரிய வந்தது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் மீன்சுருட்டி அருகேயுள்ள இராமதேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்த உடன் நியூஜெர்சிக்கு சென்று அங்குள்ள ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

    கொரோனா

    கொரோனா

    அமெரிக்காவில் கொரோனா அதிகரித்தபோது இவர் மஞ்சள், இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரித்த ரசத்தை அப்பகுதியில் 3 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிக்கு உணவு அளித்து வந்த இவர் நமது பாரம்பரிய ரசத்தையும் சேர்த்து இலவசமாக வழங்கி வந்துள்ளார்.

    நோயாளிகள்

    நோயாளிகள்

    ரசத்தை அருந்திய நோயாளிகளின் உடல் நிலையில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பெரும் மாற்றம் ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இவர் பணி புரியும் அஞ்சப்பர் பிரின்ஸ்டன் ஹோட்டலின் உணவுப் பட்டியலில் ரசம் இடம்பிடித்தது.

    நியூயார்க்

    நியூயார்க்

    மேற்படி ஹோட்டலின் கிளைகளான நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனடா கிளைகளிலும் ரசம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நாள் ஒன்றிற்கு சுமார் 500 முதல் 600 கப் ரசம் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அருண் ராஜதுரை கூறுகையில், நமது தமிழர்களின் உணவு முறைகள் அத்தனையும் மருந்துதான்.

    நினைத்ததில்லை

    நினைத்ததில்லை

    ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து நம் உடலுக்கு இன்றியமையாத உணவு வகைகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத மருந்து என்றால் அது மிகையல்ல. இதை அமெரிக்க மக்களிடம் பயன்படுத்தினேன் இப்படி ஒரு வெற்றியாக அமையும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை என கூறி உள்ளார்.

    சமையல் கலைஞர்

    சமையல் கலைஞர்

    கடந்த 2018-ம் ஆண்டு சிறந்த தென் கிழக்கு ஆசிய சமையற் கலைஞர் விருது அருண் ராஜதுரைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் பிரின்ஸ்டனில் வசிப்பவர்கள் கொரோனாவை வெல்ல உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தென்னிந்திய உணவை நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் உணவாகவே கருதுகின்றன. தற்பொழுது அருண்ராஜதுரைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    English summary
    Tamilnadu's Rasam plays important role in America for increasing antibodies. Ariyalur Chef prepares rasam in America.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X