சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசானி புயல்.. சென்னையில் இன்னும் இரு நாட்களுக்கு மழை.. தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் குளிர்ச்சியான ட்வீட் போட்டுள்ளார்.

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள அசானி புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை பூமியை குளிர்வித்து கோடை வெப்பத்தால் சிக்கித் தவித்த மக்களின் மனங்களையும் குளிர்வித்துள்ளது.

திசை மாறும் அசானி புயல்... 33 மாவட்டங்களில் மழை - உங்க மாவட்டம் நனையுமா? திசை மாறும் அசானி புயல்... 33 மாவட்டங்களில் மழை - உங்க மாவட்டம் நனையுமா?

கத்திரி வெயில்

கத்திரி வெயில்

அக்னி எனும் கத்திரி வெயிலால் சென்னையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். செய்திகளில் ஆங்காங்கே மழை பெய்கிறது என்பதை அறிந்த சென்னை மக்கள் நமக்கும் மழை பெய்யாதா என ஏங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

 சென்னை மற்றும் புறநகர்

சென்னை மற்றும் புறநகர்

அதிகாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு மழை இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் இன்று மிதமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
     பிரதீப் ஜான் ட்வீட்

    பிரதீப் ஜான் ட்வீட்

    இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் கூறுகையில், சென்னைக்கு இன்னொரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அசானி புயல் மேலும் மேலும் வலுவிழந்து வட ஆந்திர கடற்கரையோரம் காக்கிநாடா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னைக்கு இன்னொரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

    அடுத்த இரு தினங்களுக்கு மழை

    அடுத்த இரு தினங்களுக்கு மழை

    வரும் 13 ஆம் தேதி அசானி கரையை கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும். நிலக்காற்று வலுபெறும். இதனால் வெப்பம் அதிகமாகும். எனவே அடுத்த இரு நாட்களுக்கு மழையை சென்னை மக்கள் என்ஜாய் செய்யுங்கள். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 7.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 30 மி.மீ மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக அடையாற்றில் 10 மிமீ மழையும் பெய்துள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Weatherman Pradeep John says that one more spell possible for Chennai with next band getting ready.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X