2015-க்கு பிறகு சென்னை ஏரிகள்.. கோடையில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.. குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக நீர் வரத்து இருப்பதால் வரும் கோடையில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது என்ற நல்ல செய்தியை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னையில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
கடந்த 2 தினங்களாக வடதமிழகம், சென்னை, கடலோர மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் சென்னையில் கிண்டி, கோயம்பேடு, முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
தொடர் புகார்கள்.. குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடல்

தண்ணீர் பிரச்சினை
நேற்று இரவோடு மழை மூட்டைக் கட்டி விட்டதாக முன்னொரு பதிவில் போட்டுள்ள வெதர்மேன் தற்போது புதிய பதிவை போட்டுள்ளார். அதில் வரும் கோடையில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என கூறியுள்ளார்.

நீர் வரத்து
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறுகையில் தற்போது நற்செய்தியும் உண்டு, கெட்ட செய்தியும் உண்டு. முதலில் நற்செய்தியை கூறுகிறேன். 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஏரிகளின் நிலை
பூண்டி ஏரியில் வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீரும், புழல் ஏரியில் வினாடிக்கு 2200 கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 2000 கனஅடி நீரும், வீராணம் ஏரியில் வினாடிக்கு 5700 கனஅடி நீரும், சோழவரம் ஏரியில் வினாடிக்கு 500 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

நீர் வெளியேற்றம்
அது போல் பூண்டி ஏரி தனது முழுகொள்ளளவில் 35 சதவீதமும், புழல் ஏரியில் 55 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரி 25 சதவீதமும் சோழவரம் ஏரி 12 சதவீதமும் எட்டியுள்ளது. வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது. தற்போது நீர் வெளியேறி வருகிறது.

காலி குடங்கள்
இந்த 5 ஏரிகளில் இன்று வரை மொத்தம் 5200 மீட்டர் கனஅடி நீர் உள்ளது. டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அன்று இந்த ஏரிகளில் 6500 மீட்டர் கனஅடி முதல் 7000 மீட்டர் கனஅடி வரை நீர் தேக்கம் தேவை என்பதுதான் டார்கெட். இதை நாம் தொட்டால் மட்டுமே வரும் கோடையில் காலி குடங்களுடன் நாம் அலைய தேவையில்லை.

தண்ணீர் பிரச்சினை
ஆனால் நாளை இந்த ஏரிகளுக்கு அதிக நீர் வரத்து இருக்கும். அது போல் கிருஷ்ணா நீரும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை வந்தடைந்தால் நிச்சயம் டார்கெட்டை எளிதில் எட்டிவிடலாம். கடந்த 2015-க்கு பிறகு தமிழகத்தில் பருவமழை பொழிவு முதல் முறையாக 400 மி.மீ.ரை தாண்டியது. தமிழகத்தில் வழக்கமான மழை பொழிவு 438 மி.மீ. ஆகும். இன்னும் 28 நாட்களில் அதை எட்டிவிடுவோம் என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!