சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிஷோர் கே சாமி.. சிபிஎம் கடும் கண்டனம்.. சட்டரீதியான போராட்டம் தொடரும்.. பெண் பத்திரிகையாளர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டத்தின் முன்னாள் குற்றவாளியை நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும் காவல்துறை. கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை எங்களுடைய சட்டப் போராட்டத்தை கைவிட மாட்டோம். வாக்குறுதி அல்ல இன்றைய தேவை. செயல் ஒன்றே சிறந்த சொல் என்று தமிழ்நாடு பெண் பத்திரிக்கையாளர்கள் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு தனது ட்விட்டர் பதிவில், ''பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சில மணிநேரங்களில் விடுவிக்கப்பட்ட கிஷோர் கே சாமி விவகாரத்தில் எங்களுடைய அதிருப்தியை காவல் ஆணையரிடம் நேரடியாக முறையிட்டு பதிவு செய்துள்ளோம்.

இந்த வழக்கை தனி வழக்காக கருதாமல் இதற்கு முன்பும் இவர் இதே போன்ற வழக்கில் இவற்றை கவனித்தில் எடுத்துக் கொள்வதாகவும் பல ஆண்டுகளாக பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு பரப்பி வரும் கிஷோர் கே சாமி மீது தகுந்த நடவடிக்கையை தமிழக காவல்துறை எடுக்கும் என்று ஆணையர் உறுதியளித்துள்ளார். வாக்குறுதி அல்ல இன்றைய தேவை. செயல் ஒன்றே சிறந்த சொல்.

"ஒன்னும் புடுங்க முடியாது".. முழங்கிய கிஷோர் கே சாமி.. போனை பறிமுதல் செய்திருக்கோம்..போலீஸ் விளக்கம்

 கிஷோர் கே சாமி கைது

கிஷோர் கே சாமி கைது

சட்டத்தின் முன்னால் குற்றவாளியை நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும் காவல்துறை. கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை எங்களுடைய சட்டப்போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

 ஆபாசமாக பேசுகிறார்

ஆபாசமாக பேசுகிறார்

இதற்கு அகில் இந்திய ஜனநாயக பெண்கள் அமைப்பின் தேசிய துணைத் தலைவரும், சிபிஐ (எம்) மத்திய கமிட்டி உறுப்பினருமான வாசுகி உமாநாத் தனது ட்விட்டர் பதிவில், ''கிஷோர் K சாமியை பற்றி எதிர்மறையாக கூட பேசி பொருட்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் பெண் பத்திரிக்கையாளர்களை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் தொடர்ந்து பேசுகிற ஒருவரை கைது செய்து உள்ளே வைக்கிற அடிப்படை சட்ட கடமையைக் கூட தமிழக காவல்துறை செய்ய தயங்குகிறது.

 எச் ராஜா புளங்காகிதம்

எச் ராஜா புளங்காகிதம்

நான்கு அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக பேசுகிறார்களாம், எச் ராஜா கிஷோர் கே சாமியை வெளியே விட்டுவிட்டதை கொண்டாடி புளகாங்கிதம் அடைகிறார்... தமிழகம் என்ன இவர்களது விளையாட்டு மைதானமா? சட்டத்தை பயன்படுத்துவதில் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் செலக்டிவ் அம்னீஷியாவா?

 கிஷோர் மட்டமான பதிவு

கிஷோர் மட்டமான பதிவு

"மை டியர் ஆம்னி பஸ் ஆண்டி.. நீ அடிச்சு தூக்கினாலும் சரி.. தூக்கிட்டு அடிச்சாலும் சரி.. என்னை ஒன்னும் புடுங்க முடியாது" என்று பெண் பத்திரிகையாளரை மிகவும் மட்டமாக விமர்சித்து கிஷோர் கே சுவாமி தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து இருந்தார். இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு பெண் பத்திரிக்கையாளர்கள் அமைப்பு மற்றும் விமர்சனத்துக்கு உள்ளான பெண் பத்திரிக்கையாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தனர்.

 யூ-டியூப் சேனலில் கிஷோர்

யூ-டியூப் சேனலில் கிஷோர்

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்தி கிஷோர் கே.சுவாமி மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை தேடி அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு அவர் இல்லை. அவரது செல்போனை வைத்து டிரேஸ் செய்யும்போது ஒரு தனியார் யூ-டியூப் சேனலில் இருந்த கிஷோர் கே.சுவாமி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதாகவும், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

 செல்போன் பறிமுதல்

செல்போன் பறிமுதல்

இந்த நிலையில், கிஷோர் கே சாமியின் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு அறிவிப்பை சென்னை நகர போலீஸ் வெளியிட்டுள்ளது. அதில், ''தன்னை இழிவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக பெண் பத்திரிக்கையாளரிடம் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சென்னை நகர போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், 590 ஐபிசி, பெண்களை துன்புறுத்துதல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரன்ட் இல்லாத கைது எச்சரிக்கையும் விடப்பட்டு, விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படுத்த பயன்படுத்திய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. பொது மக்கள் சமூக ஊடகங்களில் பதிவுகளை இடும்போது மிகவும் கண்ணியத்துடன் பதிவிட வேண்டும். போலிச் செய்திகள், அவதூறு செய்திகள், வெறுப்பு பேச்சு ஆகியவற்றை பதிவு செய்யக் கூடாது'' என்று சென்னை நகர போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
TamilNadu women journalists forum decided to continue protest until arrest of Kishore K Swamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X