Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு முழுக்க.. எப்போது மாதாந்திர மின் கட்டண முறை அமலாகிறது? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் மீண்டும் மாதாந்திர மின் கட்டணம் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். இது தொடர்பாக.. முக்கியமாக ரீடிங் எடுப்பது பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆய்வுகளில் சிக்கல்கள், குறைகள் இல்லாத பட்சத்தில் மாதாந்திர ரீடிங் அறிமுகம் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

electricity eb

புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது. அதோடு விரைவில் ஸ்மார்ட் மீட்டர் எல்லா வீடுகளிலும் வைக்கப்படும். அதன்பின் மாதாந்திர கட்டண முறை அமலுக்கு வரும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாதாந்திர மின் கட்டணம் கொண்டு வருவதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணிகள் முடிந்த பின் மாதாந்திர கட்டணம் படிப்படியாக அறிமுகம் செய்யப்படலாம் என்கிறார்கள்.

மாதாந்திர கட்டணம்

தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் நேரடியாக மீட்டர்களை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இனிமேல் மின்சார வாரியத்திடம் இருந்து மட்டும் மீட்டர் வாங்குவதற்காக மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மீட்டர் வாங்க மக்கள் பலர் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் வகையில் மீட்டர் விற்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இவர்களிடம் மீட்டர் வாங்கிக்கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

இவர்களிடம் மீட்டர் வாங்கிய பிறகு, நுகர்வோர் மீட்டர்களை நிறுவுவதற்கு முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய டாங்கெட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாரிய அதிகாரிகள், 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். முன்னதாக, டாங்கெட்கோ மீட்டர்களை கொள்முதல் செய்து, சோதனை செய்து, பிரிவு அலுவலகங்களுக்கு மொத்தமாக அனுப்பியது. இனிமேல் டாங்கெட்கோ அங்கீகரித்த நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மக்களே வாங்க முடியும்.

ஆனால் இப்போது இபி மீட்டர் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் மாதாந்திர கட்டணம் அமலுக்கு வரும். அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் மீண்டும் மாதாந்திர மின் கட்டணம் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். இது தொடர்பாக.. முக்கியமாக ரீடிங் எடுப்பது பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆய்வுகளில் சிக்கல்கள், குறைகள் இல்லாத பட்சத்தில் மாதாந்திர ரீடிங் அறிமுகம் செய்யப்படும்.

புதிய முறை

இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும், மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்கள் அல்லது நுகர்வோருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+