தயாநிதி vs நிர்மலா சீதாராமன்.. திமுகவிற்கு சிக்கலான வீடியோ.. வட இந்தியாவில் அடித்து ஆடும் பாஜக
சென்னை: திமுக எம்பி தயாநிதிமாறன் 9 மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோவை கையில் எடுத்து பாஜக பரப்புவது ஏன் என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. அதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.
அதிமுகவை விட கடுமையாக திமுகவை தாக்கும் கட்சியாக தமிழகத்தில் பாஜக இருக்கிறது. சமூக ஊடகங்களிலும் சரி, ஊடகங்களிலும் சரி, திமுகவை தினமும் டார்க்கெட் செய்து விமர்சித்து வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.. அதிமுகவின் தலைவர்களைவிட, பாஜகவின் தலைவர்கள் தான் திமுகவை விமர்சிப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள்.

தினசரி சமூக ஊடங்களில் திமுக ஆதரவாளர்களுக்கும், பாஜக ஆதரவாளர்களுக்கும் சண்டை நடந்து வருகிறது. ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிடுவது, கருத்துக்களை வெளியிடுவதாக உள்ளார்கள். இந்த சண்டை தினமும் உக்கிரமாக நடக்கிறது.
இந்நிலையில் அண்மையில் சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் திமுகவை கடுமையாக விமர்சித்தது பாஜக. ஆனால் திமுக அதற்கு அப்போது பதிலடியும் கடுமையாக கொடுத்தது. அந்த பிரச்சனை ஒய்ந்த சில நாட்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழை வெள்ளபாதிப்பின் போது, திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் வழக்கம் போல் பாஜக விமர்சிக்க தொடங்கியது.
ஸ்டாலின், தூத்துக்குடி வெள்ள பாதிப்பின் போது, டெல்லி சென்று பிரதமரை சந்தித்துவிட்டு, இந்தியா கூட்டணியில் பங்கேற்றதை பாஜகவினர் விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த திமுக, வானிலை மையம் சரியாக மழை எச்சரிக்கை வழங்கவில்லை என்று கூறியது. மேலும் வெள்ள பாதிப்புக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்றும் திமுக குற்றம்சாட்ட தொடங்கியது.
இந்த சூழலில் டெல்லியில் அண்மையில் பேட்டி அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் "தேசிய பேரிடர் என்று அறிவிக்கும் சிஸ்டமே இல்லை. தேசிய பேரிடராக மத்திய அரசு இதுவரை அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது. வேறு எந்த மாநிலத்துக்கும் தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்தது கிடையாது.
உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் மழை, வெள்ளத்தின் போதும் தேசிய பேரிடர் என மத்திய அரசு அறிவிக்கவில்லை. எனவே, தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஆனால், மாநில அளவில் எடுத்துக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாநிலப் பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு நிச்சயம் உதவும்.
மத்திய அரசின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசால் 'மாநிலப் பேரிடர்' என அறிவிக்க இயலும். மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்று மாநில அரசு பேரிடராக அறிவிக்கும் பட்சத்தில் மாநில அரசின் பேரிடர் நிதியில் இருந்து 10 சதவீதத்தை அந்த பேரிடருக்கு பயன்படுத்தவும் மாநில அரசால் முடியும்" என்றார்.
இந்த பேட்டிக்கு உடனடியாக பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு, மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார். திமுக அரசையும், முதல்வரையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்றார்.
இதனிடையே தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி பெரிய அளவில் விவாதமானது. தமிழக மக்களுக்கு மத்திய அரசு போதிய வெள்ளள நிவாரண நிதியுதவி அளிக்கவில்லை என்றும், நிர்மலா சீதாராமன் சொல்வதை பாருங்கள் என்றும் திமுகவினர் வேகமாக பரப்பினர். திமுகவினரின் இந்த செயலுக்கு பதிலடியாகவே தயாநிதிமாறன் 9 மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோவை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வடமாநிலத்தவர் குறித்து தயாநிதிமாறன் பேசிய பேச்சு வடமாநிலங்கள் முழுக்க பரப்பப்பட்டது. வடமாநிலங்களில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசிய பேச்சும் இதேபோல் தான் பரப்பப்பட்டது. மேலும் ஆ ராசா, திமுக எம்பி செந்தில்குமார் ஆகியோர் பேச்சும் இப்படி பரப்பப்பட்டது. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிராக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவே இப்படி பாஜக பரப்புவதாக கூறப்படுகிறது. வடமாநிலங்கள் தான் பாஜகவின் பலம் என்கிற நிலையில், அந்த மாநிலத்தவருக்கு எதிரான கருத்துக்களை பேசினால் அதனை அதிக அளவில் பரப்பி திமுகவை காலி செய்து வருகிறது பாஜக. திமுகவை வைத்து காங்கிரஸை காலி செய்ய இப்படி அதிரடியாக பாஜக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications