இந்த முறை ஸ்டாலின் டார்கெட் அல்ல.. உதயநிதி... சேப்பாக்கத்தில் என்ன நடக்கிறது?
சென்னை: 2006-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட அனுபவம் உள்ள ஆதி ராஜாராம் கடந்த 2021 தேர்தலில் கொளத்தூரில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த முறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்கி உள்ளார். இந்த முறை ஸ்டாலினுக்கு பதில் உதயநிதியை டார்கெட் செய்தது தான் எடப்பாடி பழனிசாமி முதல் அண்ணாமலை வரை பலரும் களம் ஆடி வருகிறார்கள்.. உதயநிதியை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆதி ராஜாராம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆயிஷா பேகம், தமிழக வெற்றி கழகம் சார்பில் டி.செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்த அன்று முதலே தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்.

கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் உதயநிதிக்கு ஆதரவாக தொகுதிகளில் ஒவ்வொரு தெருவாக தீவிரமாக களமிறங்கி வேலை செய்கிறர்கள். உதயநிதி ஸ்டாலின் வெளி மாவட்டங்களுக்குச் சென்றாலும், அவருக்காக கட்சி நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வலுவான கட்டமைப்புடன் இருக்கிறது.
ஆனால் அதிமுக தரப்பில் களம் இறங்கி உள்ள ஆதி ராஜாராம் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் தவிக்கிறாராம். குறிப்பாக பாஜக தரப்பில் முறையான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்று அதிமுகவினர் குமுறுகிறார்கள். மேலும், தேர்தல் பணிகள் (துண்டுபிரசுரம் வழங்குதல், வாக்கு சேகரிப்பு, கூட்டங்கள் நடத்துதல் போன்றவை) எதை எடுத்தாலும், தொகுதி நிர்வாகிகள் மற்றும் சில தொண்டர்கள் பணம் கேட்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், அதிமுக வேட்பாளருக்கு பாஜ நிர்வாகிகளும் தொண்டர்களும் முறையான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் துண்டுபிரசுரம் வழங்குதல், வாக்கு சேகரிப்பு, கூட்டங்கள் நடத்துதல் என எந்த தேர்தல் பணியை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் 'பணம் பணம்' என்று கேட்பதாகவும் கூறுகிறார்கள். எனினும் வழக்கமான உற்காகத்துடன் ஆதி ராஜாராம் களம் இறங்கி உள்ளார்.
முன்னதாக 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறங்கினார் ஆதி ராஜாராம். அந்தத் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காக அதிமுக தலைமை ஆதி ராஜாராம் அவர்களைத் தேர்வு செய்தது. 2006-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட அனுபவம் உள்ள ஆதி ராஜாராம் கடந்த 2021 தேர்தலில் கொளத்தூரில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த முறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்கி உள்ளார். இந்த முறை ஸ்டாலினுக்கு பதில் உதயநிதியை டார்கெட் செய்தது தான் எடப்பாடி பழனிசாமி முதல் அண்ணாமலை வரை பலரும் களம் ஆடி வருகிறார்கள்.. உதயநிதியை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி!












Click it and Unblock the Notifications