ரூ.56,000 கோடி.. டாஸ்மாக் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறோம்.. நிதி செயலாளர் சொன்ன மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக்கில் மது விற்பனை மூலமாக கடந்தாண்டு ரூ.51 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ.56 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்துள்ளார். இதனால் டாஸ்மாக் மதுபான விலை உயருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே பல்வேறு துறைகளை சீரமைப்பதன் மூலமாக தமிழக அரசின் வருவாயை அதிகரிப்போம் என்று கூறி வருகிறது. குறிப்பாக டாஸ்மாக் மதுபான விற்பனையில் கூடுதலாக வாங்கப்படும் ரூ.10ஐ அரசின் கஜானாவுக்கு கொண்டு வருவோம் என்று அமைச்சர்கள் பேசி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tasmac Liquor TVK Vijay

கடந்த பட்ஜெட்டை விடவும் இம்முறை கூடுதல் ரூபாய் பட்ஜெட்டில் போடப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்கவும் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே டாஸ்மாக் மதுபான விற்பனையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவும் பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நிதித்துறை செயலாளர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், டாஸ்மாக்கில் மது விற்பனை வரி மூலமாக கடந்தாண்டு ரூ.51 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. நடப்பாண்டில் சுமார் ரூ.56 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல் தமிழக அரசு மின்சாரத்துறையில் சில திட்டங்களை மேற்கொள்ள அதிக கடன் வாங்க வேண்டிய தேவை உள்ளது.

ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்குமா என்பது சந்தேகம் தான். தமிழக அரசின் கடன் சதவிகிதத்தை 3 சதவிகிதத்திற்கு வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் மத்திய அரசு கூடுதலாக கடன் வாங்க நம்மை அனுமதிக்காது. ஒருவேளை அனுமதித்தால், சில தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழல் உள்ளது. மின்சாரத்துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் தவெக ஆட்சிக்கு வந்த பின் 717 மதுபான கடைகளை மூடுவதாக அறிவித்தது. ஆனால் 717 கடைகள் மூடப்பட்டதற்கான ஆதாரங்களை முழுமையாக வெளியிடவில்லை. இருப்பினும் நடப்பாண்டில் மதுபான விற்பனை மூலமாக கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பதாக தமிழக அரசு திட்டமிட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+