பள்ளிக்கூடத்தில் மது டோக்கன்.. அதிர வைத்த சேலம்.. வெறுத்து போன மக்கள்.. முதல் நாளில் அக்கப்போர்!
மது வாங்க அரசு பள்ளியில் டோக்கன் விற்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
சென்னை: மதுக்கடைகள் திறந்த முதல் நாளிலேயே பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.. இதில் உச்சக்கட்டமாக நடந்தது ஒரு பள்ளிக்கூடத்தில் வைத்து மதுபானம் வாங்க டோக்கன் தந்ததுதான்!!
Recommended Video
சென்னையை தவிர்த்து நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு சொன்னாலும் போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே பல ஊர்களில் கடையை திறப்பதற்கு ஊழியர்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் நெருக்கி தள்ளியது.

சில இடங்களில் இதை கொண்டாடவும் செய்தனர்.. விசிலடித்தும், கைதட்டியும் கடைக்காரர்களை வரவேற்றனர்.. பல்வேறு மாவட்டங்களில் வெயில், சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் குடையுடன் வந்ததுடன், அந்த குடைக்குள்ளேயே சரக்குகளை அள்ளி கொண்டு போனார்கள் குடிமகன்கள்! இதற்காக 10 ரூபாய் குடை முதல் விற்பனையும் செய்யப்பட்டது.
மதுபானம் வாங்க ஆதார் அட்டை கட்டாயம் என்று சொல்லப்பட்டது.. கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும் என்பதாலும், சமூக விலகலை தடுக்கவும் டோக்கன் சிஸ்டம் கொண்டு வரப்பட்டது.. ஆனால் இந்த டோக்கனையே முண்டியத்து கொண்டுதான் மக்கள் வாங்கினர்.
எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நேற்று நடந்தாலும், ஒரு பள்ளிக்கூடத்தில் வைத்து டோக்கனை தந்ததை ஏற்கவே முடியவில்லை.. சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தான் இந்த டோக்கன் விநியோகிக்கப்பட்டது.. இதை பார்த்ததும் அந்த கிராம மக்கள் கொந்தளித்துவிட்டனர்.. நல்ல ஒழுக்கத்தை கற்பிக்கும் பள்ளிக் கூட வளாகத்தில் வைத்து மதுவுக்கான டோக்கன் விநியோகம் ஆனதால், அதிர்ச்சி அடைந்தனர்.
அதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.. மக்களின் ஆவேசத்தை கண்டதும், இது சம்பந்தமான நடவடிக்கை உடனே எடுக்கப்பட்டது.. பள்ளிக்கூடத்தில் வைத்து டோக்கன் தருவது நிறுத்தப்பட்டது.. எனினும், பள்ளிக்கூடத்தை மதுபாட்டில் வாங்க டோக்கன் வழங்கும் இடமாக மாற்றியவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் முறையிட்டுள்ளனர்.
ஒரு பள்ளிக்கூடம் இருக்கும் தெருவில்கூட டாஸ்மாக் இருக்கக்கூடாது என்பதைதான் நாம் அடிக்கடி தெரிவித்து வருகிறோம்.. எத்தனையோ போராட்டங்களால் மாவட்டங்களில் பள்ளிக்கூட தெருவில் இருக்கும் டாஸ்மாக் கடைகளும் அங்கிருந்து வேறு இடத்திற்கு அகற்றப்பட்டும் இருக்கின்றன.. இந்த நிலையில் அரசு பள்ளியில் வைத்தே மது வாங்க டோக்கன் தந்ததை இன்னமும் யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications