Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருக்கும் இப்படி ஒரு சோகம் வரக் கூடாது! அண்ணன், தாய், தந்தை! ஒரே ஆண்டில் மூவரை இழந்த மகேஷ் பாபு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா இன்று உயிரிழந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் மட்டுமே அவரது தந்தை, அண்ணன், தாயார் என ஒரே ஆண்டில் மூவரை இழந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிலை யாருக்கும் வரக் கூடாது என சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் நடிகர் விஜய் போல தெலுங்கு திரையுலகில் இளம் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக வளம் வருகிறார்.

மகேஷ் பாபு மட்டுமல்லாது அவரது குடும்பமே திரை உலகில் மிகவும் செல்வாக்கு பெற்ற குடும்பமாகும். அவரது தந்தை கிருஷ்ணாவும் தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்.

நடிகர் கிருஷ்ணா

நடிகர் கிருஷ்ணா

சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாகவும் குணசித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ள கிருஷ்ணா, நடிகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு முகங்களை கொண்டவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சி வந்த அவரது மகன் மகேஷ் பாபுவையும் நாயகனாக களம் இறக்கி வெற்றி பெற்றவர். 80 வயதான அவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

மகேஷ் பாபுவுக்கு ஆறுதல்

மகேஷ் பாபுவுக்கு ஆறுதல்

இந்த நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள திரை பிரபலங்களும் ரசிகர்களும் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

சோகமான 2022

சோகமான 2022

சமூக வலைதளங்கள் முழுவதும் கிருஷ்ணாவின் முகமே நிறைந்திருக்கிறது. குறிப்பாக அவரது மகனான மகேஷ் பாபுவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். மற்றவர்களுக்கு எப்படியோ இந்த ஆண்டு நடிகர் மகேஷ் பாபுவிற்கு மிகவும் சோகமான ஆண்டு. ஒரே ஆண்டில் அவரது தாய், தந்தை, அண்ணன் என மூவரை இழந்திருக்கும் மகேஷ்பாபுவை போல வேறு யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என சமூக வலைதளங்களில் அதிக பதிவுகளை காண முடிகிறது.

3 பேர் மரணம்

3 பேர் மரணம்

புத்தாண்டு முடிந்தவுடன் அதாவது ஜனவரி 8ஆம் தேதி நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரான ரமேஷ் பாபு 56 வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனால் அவரது குடும்பமே நிலை குலைந்து போன நிலையில் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி 70 வயதில் மரணம் அடைந்தார். இதனால் கிருஷ்ணா மேலும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்போது அவரும் உயிரிழந்துள்ளார். இதனால் ஒரே ஆண்டில் தனது குடும்பத்தை இழந்துள்ளார் மகேஷ் பாபு என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+