தாய் மாமன் தங்க மோதிரம்.. 0.01ல் டெண்டரை தூக்கிய ஜாய் ஆலுக்காஸ்! டக்னு அதிமுக கேட்டதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தாய் மாமன் தங்க மோதிரம்" திட்டத்திற்கான ரூ.755 கோடி டெண்டரை தட்டித் தூக்கியுள்ளது ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம்.. இந்த விவகாரத்தில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையைக் குறிப்பிட்டதையும், அரசு நிறுவனங்களை விட்டுவிட்டுத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி அதிமுக ஐடி விங் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களின் சமூகபாதுகாப்பு மற்றும் திருமண உதவித் திட்டங்களை மேம்படுத்தும் வகையில், அரசின் "வெற்றி" தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" டிசைன் செய்யப்பட்டுள்ளது.. இதற்காக தமிழக அரசு வருடந்தோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Thai Maman Thanga Mothiram Scheme

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டத்தை முதலமைச்சர் நேரில் தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, பயனாளிகளுக்கு வழங்குவதற்காக தேவையான தங்கம் கொள்முதல் செய்யும் மிகப்பெரிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.755 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் (Joyalukkas) தட்டிச் சென்றுள்ளது..

தட்டித் தூக்கிய ஜாய் ஆலுக்காஸ்

தங்க நகைகள் தயாரிப்பதற்கான கூலி மற்றும் இதர சேவை கட்டணங்களுக்கு சந்தையில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகவும் குறைந்த விலையை குறிப்பிட்டு, மற்ற முன்னணி நிறுவனங்களை அசத்தும் கொடேஷனை இந்நிறுவனம் அளித்துள்ளது. இந்த விலைப் புள்ளி அடிப்படையிலேயே ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

எனினும், தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கோரியதில், முன்னணி நகை நிறுவனங்கள் மற்றும் பெரிய தொகை இடையிலான வித்தியாசம் இப்போது அரசியல் களத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஜாய் அலுக்காஸ் நிறுவனம் முன்மொழிந்த மிகக்குறைந்த விலை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நடிகர் விஜய் குறித்த அரசியல் விவாதம், சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், அதிமுக ஐடி விங்-கும் இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில் உள்ள விவரம் இதுதான்:

அதிமுக ஐடி விங்

"தாய் மாமன் தங்க மோதிரம்" திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன.

அதில், "ஜாய் அலுக்காஸ்" என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் Sister Concern எனக் கூறப்படும் ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் Brand Ambassador ஆக விளம்பரங்கள் நடித்தவர் யார் தெரியுமா? நம்ம ப்ரோ @actorvijay தான் !

மற்ற நிறுவனங்கள் எல்லாம் 400-15000 ரூபாய் வரை செய்கூலி அளவு கோரிய போது, இந்த நிறுவனம் மற்றும் ஒரு பைசா கோரி இருப்பது புருவங்களை உயர்த்தாமல் இல்லை.

தமிழக அரசு Major Shareholder ஆக இருக்கும் Titan நிறுவனத்திடம் இந்த விலையை Match செய்ய அரசு கோரியதா? தனியார் நிறுவனம் செய்வதற்கு பதிலாக அரசு நிர்வகிக்கும் நிறுவனமே செய்தால் அது இன்னும் செம்மையாக அமையுமே ? ஆவன செய்வீர்களா @CMOTamilNadu ?" என்று பதிவிட்டுள்ளது.

டாப்பில் ஜாய் ஆலுக்காஸ் சொன்ன 0.01 ரூபாய்

இந்த பதிவுடன் சேர்த்து ஒரு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.. அதில் இந்த திட்டத்திற்காக வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி விவரங்களை பட்டியலிட்டுள்ளது. மொத்தம் 11 முன்னணி நகை நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அவை கோரிய விலைத் தொகைகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.

முதல் இடத்தில் உள்ள ஜாய் அலுக்காஸ் நிறுவனத்திற்கும் மற்ற நிறுவனங்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் தொகை வித்தியாசம் காட்டியுள்ளது..

குறிப்பாக இந்த ஒப்பந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் வெறும் 0.01 ரூபாயை மட்டுமே விலைப்புள்ளியாகக் கோரியுள்ளது. ஆனால், அதற்கடுத்துள்ள மற்ற முன்னணி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கிலும், லிஸ்ட்டில் கடைசி இடத்திலுள்ள நிறுவனம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாயை செய்கூலியாகவும் கோரியுள்ளன.

இந்த தரவுகளின் அடிப்படையில், முதலிடத்தில் உள்ள நிறுவனத்திற்கும், மற்ற நிறுவனங்களுக்கும் இடையில் மிகப்பெரிய அளவிலான தொகை வித்தியாசம் இருக்கிறது.. இதைதான் அட்டவணை போட்டு, அதிமுக ஐடி விங் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது... உடனே இந்த பதிவுக்கு தவெகவினர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+