Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் பாடலில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார்.. "தளபதி கச்சேரி"யில் இந்த வரிகளை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகி இருக்கிறது. இந்தப் பாடலில் கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகிய அரசியல் ஆளுமைகளின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதோடு, விஜய்யின் அரசியல் வருகையை சொல்லும் வகையில் ஒருத்தனும் வாரானே.. திருத்திட போறானே என்று வரிகள் இடம்பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அப்போதே இன்னும் ஒரு படத்தில் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதன்பின் விக்கிரவாண்டி மாநாடு நடந்து முடிந்த நிலையில், நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தை கடைசி படமாக அறிவித்தார். இந்தப் படத்தை இயக்குநர் அ.வினோத் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Thalapathy Kacheri

ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி டியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்தது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகி இருக்கிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பிரபல ராப் பாடகர் அறிவு எழுதி இருக்கிறார். வாத்தி ரெய்டு பாடலையும் அறிவு தான் எழுதி இருந்தார்.

தளபதி கச்சேரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அரசியலுக்கு வந்தபின் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்தப் பாடலின் வரிகள் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. அதற்கேற்ப விஜய் இந்தப் பாடலில் ஒற்றுமையை வலியுறுத்தி இருக்கிறார். அதற்கேற்ப கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் புகைப்படங்களையும் காட்டி இருக்கிறார்.

அதேபோல் பாடலின் ஒரு பகுதியில், "தனக்குனு வாழாத.. தரத்துல தாழாத.. ஒருத்தனும் வாரானே.. திருத்திட போறானே" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக அரசியலில் கால் பதித்துள்ள விஜய்யின் இமேஜை மனதில் வைத்தும் பாடல் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+