Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை பிறக்கும் முன்னே வழி பிறந்தது...தாலிக்கு 8 கிராம் தங்கம் திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்

திருமண உதவித் திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திருமண உதவித் தொகை திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். திருமண உதவித்தொகைக்காக காத்திருக்கும் எண்ணற்ற ஏழை பெண்களின் வாழ்க்கையில் இந்த திருமண உதவித் தொகையின் மூலம் வழி பிறந்துள்ளது.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவிதிட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதிஉதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பணத்துடன் தாலிக்கு தங்கம்

பணத்துடன் தாலிக்கு தங்கம்

இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் இத்திட்டத்துடன் தாலிக்கும் தங்கம் என்ற பெயரில் தங்கம் வழங்கும் திட்டத்தினை கடந்த 2011ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். உயர்கல்வி பயின்ற பெண்களுக்கு 25 ஆயிரமும், பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரமும், இதனுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

என்னென்ன தேவை

என்னென்ன தேவை

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 4 கிராம் தங்கம், 8 கிராமாக உயர்த்தப்பட்டது. திருமணத்திற்கு 15 நாளுக்கு முன்னர் மணப்பெண்ணின் பெற்றோர், இருப்பிடச்சான்று, வருமானச் சான்று, திருமண பத்திரிக்கை உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். திருமணம் முடிந்ததும், அதனை பதிவு செய்து பதிவு சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.

உதவித் தொகை வரலையே

உதவித் தொகை வரலையே

தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் சமூகநல அலுவலர்கள் மூலம் மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் மூலமாக பல ஏழை, எளிய மக்கள் மிகவும் பயன்பெற்று வந்தனர். ஆரம்ப காலகட்டத்தில் திருமணம் முடிந்த உடன் வழங்கப்பட்டு வந்த பணம் மற்றும் தங்கம் தற்பொழுது 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பணம், தங்கம் எதுவும் வழங்கப்படமால் இருப்பது பொது மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அரசு பணியில் இருந்தால் தள்ளுபடி

அரசு பணியில் இருந்தால் தள்ளுபடி

இந்த நிலையில் திருமண நிதி உதவி பெறுவதில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலும், அல்லது வேறு ஏதேனும் திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளாரா என்பதையும் ஆய்வு செய்து அப்படி இருப்பின் அந்த விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்திட வேண்டும்.

வருமான உச்சவரம்பு

வருமான உச்சவரம்பு

மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் மனு தள்ளுபடி செய்திட வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருப்பதற்கான வருமான சான்றிதழை அரசு அலுவகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் தொடக்கம்

முதல்வர் தொடக்கம்

இந்த நிலையில் திருமண உதவித் திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் தாலிக்கு தங்கம் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் எம்எல்ஏ

திருப்பூர் எம்எல்ஏ

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் தாலிக்கான தங்கத்தை வழங்கினார். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்துகொண்டு 150 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை வழங்கினார்.

Recommended Video

    சும்மா வாய் வார்த்தை பேசு மாட்டேன்.. 8 மாத செயல்பாடுகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின் - வீடியோ!
    பெண்கள் திருமண உதவித் தொகை திட்டம்

    பெண்கள் திருமண உதவித் தொகை திட்டம்

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட 243 பயனாளிகளுக்கு ரூ.92 லட்சம் மதிப்பில் தங்கக் காசுகளும், ரூ.1.04 கோடி மதிப்பில் திருமண உதவி தொகையும் வழங்கப்பட்டது. இதன்படி மொத்தம் ரூ.1.96 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கபட்டது. இந்த விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+