இனிமே எடப்பாடிதான் எல்லாம்! அதிமுக பொதுச்செயலாளர் பதவியால் கிடைத்த 10 சூப்பர் பவர்கள்.. முக்கியம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு சில சூப்பர் பவர்கள் கிடைத்து உள்ளன.
அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்று இருந்தாலும், அதிமுகவின் பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்தது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் மட்டுமே எடப்பாடி பதவி செல்லும் என்ற நிலை இருந்தது.
இதையடுத்தே எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும், பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.

இதில் 10 நாட்களில் பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததால் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அங்கீகாரம் காரணமாக எடப்பாடிக்கு கிடைத்து இருக்கும் 10 சுப்ரீம் பவர்கள் பின்வருமாறு,
1. வேட்பாளர் தேர்வு - எடப்பாடி அதிமுகவின் வேட்பாளர்களை தனியாக தேர்வு செய்ய முடியும். தேர்தலில் எந்த வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதை ஜெயலலிதா போல தனியாளாக முடிவு எடுக்க முடியும்.
2. இரட்டை இலை - அதிமுகவின் இரட்டை இலைக்கு எடப்பாடி எப்போதும் உரிமை கோர முடியும். இப்போது சின்னம் அவரிடம் அதிகாரபூர்வமாக உள்ளது.
3, கூட்டணி முடிவு - எடப்பாடி அதிமுகவின் கூட்டணி முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியும். அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் கூட்டணி வைக்காது என்று எடப்பாடி முடிவுகளை எடுக்க முடியும்.
4. நீக்கம் - கட்சியில் இருந்து எடப்பாடி யாரை வேண்டுமானாலும் நீக்க முடியும். யாரை வேண்டுமானாலும் சேர்க்க முடியும். இதற்கான முழு உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது.
5. பொதுக்குழு விதிகளை மாற்ற முடியும் - எடப்பாடி நினைத்தால் பொதுக்குழு விதிகளை மாற்ற முடியும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் நீக்க முடியும்.
6. எடப்பாடி நினைத்தால் இனி எளிதாக பொதுக்குழுவை கூட்ட முடியும்.
7 . ஒழுங்கு நடவடிக்கை - கட்சியில் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இனி எடப்பாடியால் முடியும். கட்சியில் மாவட்ட செயலாளர்கள் தொடங்கி எல்லோரையும் எடப்பாடி நியமிக்க முடியும்.
8. சட்டசபையில் அதிமுகவின் நிலைப்பாடு, சட்டசபையில் யாருக்கு என்ன பதவி என்பது போன்ற முடிவுகளை எடுக்க கொறடாவிற்கு எடப்பாடி உத்தரவிட முடியும்.
9. தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி கடிதங்களை அனுப்ப முடியும்.
10. நிதி நிர்வாகம் - கட்சியின் பொருளாளருடன் சேர்ந்து நிதி நிர்வாகத்தை எடப்பாடி கவனிக்க முடியும்.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications