சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் கொரோனா சுனாமி.. மக்களே மிக, மிக கவனம் வேணும்.. சிறப்பு அதிகாரி அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று சுனாமிபோல் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.

Recommended Video

    சுனாமி யாய் பரவும் கொரோனா: சிறப்பு அதிகாரியின் ஷாக் மெசேஜ்!

    தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் மிக அதிவேகமாக் சென்று வருகிறது.

    பெங்களூரில் கொரோனா உறுதியான 3 ஆயிரம் பேரை காணவில்லை.. மாயமானவர்கள் பரப்பும் வைரஸ்.. அமைச்சர் பகீர்! பெங்களூரில் கொரோனா உறுதியான 3 ஆயிரம் பேரை காணவில்லை.. மாயமானவர்கள் பரப்பும் வைரஸ்.. அமைச்சர் பகீர்!

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,655 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 98 உயிரிழப்புள் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொரோனா அதிவேகம்

    கொரோனா அதிவேகம்

    கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வார இறுதி நாள் ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள், மால்கள், உடற்பயிற்சி, சலூன்கள் திறக்க அனுமதி இல்லை. கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    சென்னையில் விஸ்வரூபம்

    சென்னையில் விஸ்வரூபம்

    தமிழகத்தை பொறுத்தவரை தலைநகர் சென்னையில் தொற்று மிக மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 4,764 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையின் அம்பத்தூர், ஆவடி, அண்ணா நகர், எழும்பூர், கிண்டி, வேளச்சேரி என அனைத்து மண்டலங்களிலும் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    கொரோனா சுனாமி

    கொரோனா சுனாமி

    கொரோனா தொற்று நடவடிக்கையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள சென்னைக்கான சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் ஐ.ஏ.எஸ் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னையில் கொரோனா தொற்று சுனாமிபோல் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. சென்னை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

    ஆக்சிஜன் இருப்பில் உள்ளது

    ஆக்சிஜன் இருப்பில் உள்ளது

    மக்கள் கூட்டமாக கூடக் கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும். சென்னையில் தினமும் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் தொற்று பாதித்த 25,000 பேருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்டுகிறது. சென்னையில் போதிய ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. நகரில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஏ.சித்திக் கூறினார்.

    English summary
    The corona epidemic in Chennai is spreading like a tsunami. Special Coordinating Officer MA Siddiqui said people should be careful
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X