Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

844 நிழற்குடைகள்; 362 சாலைகள்- புதிய தோற்றத்தைப் பெறும் சிங்கார சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர மேயராக பிரியா பதவியேற்று நேற்றுடன் ஒரு வருடக் காலம் முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னை மாநகராட்சிக்கு ஒரு பட்டியலின பெண் மேயராக பதவியில் அமர்ந்தது ஒரு வரலாற்று நிகழ்வு என அப்போது அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

The Greater Chennai Corporation is rehabilitating 844 shelters and 362 roads

அவரது பதவியேற்பு கட்சி சார்பைக் கடந்து பல தரப்பினரின் பாராட்டுதல்களைப் பெற்றது. அந்தப் பாராட்டுதல்களைத் தனது சுறுசுறுப்பான செயல்பாடுகளால் தக்கவைத்தார் மேயர் பிரியா. குறிப்பாகக் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின் போது சிறப்பாக மக்கள் பணியாற்றி, சென்னை நகரப் பகுதிகளில் ஒரு மணிநேரம் கூட மழைநீர் தேங்காமல் களப்பணியாற்றினார்.

The Greater Chennai Corporation is rehabilitating 844 shelters and 362 roads

362 சாலைகள் சீரமைப்பு:

இப்போது அவரது தலைமையின் கீழ், சென்னை மாநகராட்சி புதிய தோற்றத்தைப் பெற்று வருகிறது. பல பகுதிகளில் புதியதாகத் தார்ச் சாலைகள் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி மாத‌த்திற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியாவின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

The Greater Chennai Corporation is rehabilitating 844 shelters and 362 roads

குறிப்பாக 43.20 கோடி ரூபாய் செலவில் 362 சாலைகளைச் சீரமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மொத்தம் ஆறு மண்டலங்களில் 62.73 கி.மீ தூரத்திற்கு 362 சாலைகள் அமைக்கும் பணிக்காகத்தான் ரூ. 43.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

The Greater Chennai Corporation is rehabilitating 844 shelters and 362 roads

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராயபுரம், மணலி, திருவொற்றியூர், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி ஆகிய பகுதிகளில் 45.5 கி.மீ., நீளத்திற்கு 334 சாலைகள் ரூ. 25.20 கோடியில் அமைக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Greater Chennai Corporation is rehabilitating 844 shelters and 362 roads

மேலும் ரூ. 18 கோடியில் 17.23 கி.மீ.க்கு 28 பேருந்து சாலைகள் அமைப்பதற்கான பணி ஆணை கடந்த 18 பிப்ரவரி 2023 அன்று அறிவிக்கப்பட்டு, அதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் விளக்கப்பட்டுள்ளது.

The Greater Chennai Corporation is rehabilitating 844 shelters and 362 roads

இந்தச் சாலை அமைக்கும் பணிகளை நவீனமான முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உட்புற மற்றும் பேருந்து சாலைகளை அமைப்பதற்கு முன்னதாக, தற்போதுள்ள சாலையை முழுவதுமாக அரைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இரவு நேரங்களில் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் போக்குவரத்து மாற்றத்தைக் குறிக்கும் வகையில் கட்டாயம் சாலைகளில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மழை வெள்ளத்தின்போது பாதிப்படைந்த சாலைகள் மீண்டும் புதிய பொலிவைப் பெற்றுவருகின்றன.

844 நிழற்குடைகளை புனரமைப்பு :

The Greater Chennai Corporation is rehabilitating 844 shelters and 362 roads

மழையின்போது மக்கள் வெள்ளநீரில் சிக்கித்தவிக்காமல் இருக்க எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவோ, அதைப்போல இப்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. அதற்காகவும் சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் முறையாக நிழற்குடைகள் பராமரிக்கப்படாததால், சென்னை மாநகரப் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஆகவே சென்னை நகரில் உள்ள பயணிகள் நிழற்குடைகளைப் புதுப்பிக்க மேயர் பிரியா தலைமையில் கூடிய மாதாந்திர கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு, அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முறையாக 844 பேருந்து நிழற்குடைகளை புரனமைக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது. மாநகரம் முழுவதும் உள்ள 844 பேருந்து நிழற்குடைகளைச் சீரமைக்கப் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்தப் பணிகளைச் செய்து முடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நிதி திரட்டல் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 20 கோடி வருவாய் கிடைக்கும் என நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

The Greater Chennai Corporation is rehabilitating 844 shelters and 362 roads

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆற்காடு ரோடு, சூளை மேடு ரோடு எனப் பல இடங்களில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் வெயிலில் நடு ரோட்டில் காத்துக் கிடக்கின்றனர். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலிலிருந்து பயணிகளைக் காப்பது மிகமிக முக்கியம் என நம்மிடம் பேசிய பயணி தரணிதரன் குறிப்பிடுகிறார்.

மேலும் அவர், "அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை. நிழற்குடைகளில் அமர்வதற்கு இருக்கைகள் கூட இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நிழல் தரும் வகையில் கூரை அமைத்துக்கொடுத்தால் கூட போதுமானது" என்றார்.

The Greater Chennai Corporation is rehabilitating 844 shelters and 362 roads

பொதுமக்களின் இந்தத் தேவைகளை எல்லாம் இந்த பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனம் மூலம் ஒன்றிணைந்து செய்யப்படும் நிதி திரட்டல் சரி செய்யும் என்கிறார் சென்னையில் பல காலமாக ஒரு கார்பரேட் கம்பெனியில் பணியாற்றும் ராமஷேசன்.

இந்தப் பணிகளைக் கடந்து மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சி ஒப்புதல் வழங்கி உள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தின்போது சென்னையில் உள்ள பல பாரம்பரிய கட்டடங்களைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஆங்கிலேயர் கால ஆட்சியின் போது கட்டப்பட்ட கட்டடங்களைப் பாதுகாக்கும் விதமாக அவற்றை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இப்போது அதே பணிகளை மேயர் பிரியா தொடங்கியுள்ளார். சென்னை சென்ட்ரல் அருகே உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலை நில அதிர்வு போன்ற திடீர் பேரிடரிலிருந்து காப்பாற்ற அதனை மறுசீரமைப்பு செய்யச் சென்னை மாநகராட்சி கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானமானது எதிர்வரும் காலத்தில், இக்கட்டடங்கள் பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் சேதமடைந்துவிடாமல் இருக்க நவீன முறையில் அதை புனரமைக்கத் துணை செய்யும். இக்கட்டடம் மட்டுமல்லாது ரிப்பன் மாளிகை உள்ளிட்ட சில கட்டடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றையும் சீரமைக்க உள்ளனர்.

ஆபத்தான நிலையில் 87% கட்டடங்கள் :

இக்கட்டடங்களை வலுப்படுத்த ஃபைபர் ராப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. முன்பே ரிப்பன் மாளிகை 2013 ஆம் ஆண்டில் தரைதளத்தினை வலுப்படுத்த 1500 சதுர மீட்டருக்கு மேல் ஃபைபர் ரேப் பயன்படுத்தப்பட்டது.

கடந்த 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் சென்னை நகரம் பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடி ஆபத்துகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. மேலும் ஆபத்தான பட்டியலில் 2வது Zone இல் இருந்த சென்னை 3 ஆம் Zone க்கு மாற்றப்பட்டது.

நிலநடுக்கத்தைக் கண்டறியும் நிபுணர்களின் கூற்றின்படி, சென்னையிலுள்ள உயரமான கட்டிடங்களுக்கு நில அதிர்வை எதிர்கொள்ளுவதற்கான மறுசீரமைப்பு பணிகள் தேவைப்படுகின்றன என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2011 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, சென்னை நகரத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் 87% உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கம் ஏற்பட்டால் நிச்சயம் பாதிக்கப்படக்கூடியவை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+