சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மீன் வாங்க போறீங்களா".. தயவுசெய்து முதல்வர் சொல்றதை கேளுங்க.. எல்லாம் உங்க நல்லதுக்குத்தான்!

இறைச்சி வாங்கும்போது கூட்டம் கூடுவதை தவிர்க்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அசைவ பிரியர்களுக்கு இன்று ஒரு மிக மிக முக்கியமான அட்வைஸை தமிழக முதல்வர் எடப்பாடி வலியுறுத்தி உள்ளார்!

எப்போது லாக்டவுன் போடப்பட்டதோ, அதற்கடுத்த ஒருசில தினங்களிலேயே சென்னை மீன் மார்க்கெட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டது... இதுபோன்ற சமயத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டது அசைவ பிரியர்கள்தான்.. ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கறிகடைகளில் கூட்டம் கூடியதே இதற்கு சாட்சி.

The only cure for corona infection is awareness, says CM Edapadi palanisamy

இந்த சமயங்களில் கல்யாணம் உட்பட விழாக்களுக்கு தமிழக அரசு அனுமதி தந்தாலும், அசைவம் இன்றி எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாத சூழலும் ஏற்பட்டது.. எனினும், இவர்களுக்கும், அசைவ பிரியர்களுக்கும் பாதிப்பும் இல்லாமல் மீன், கறி மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டன.

ஆனால் சென்னை மார்க்கெட்களில் மக்கள் முட்டி மோதி கொண்டு இறைச்சியை வாங்கினர். ஏற்கனவே தொற்று அதிகமாக இருந்த சென்னையில் , இந்த கூட்டத்தை பார்த்ததும் மறுபடியும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.. இதனால் ஷாக் ஆன அசைவ பிரியர்களுக்கு வாய்த்தது என்னவோ முட்டையும், கருவாடும்தான்!

சின்ன சின்ன மளிகை கடைகளை கூட மிச்சம் வைக்காமல் கருவாடு வாங்கினர் அசைவ பிரியர்கள்.. கறி கடைகள்தான் மூடப்பட்டது என்றால், காசிமேடு மீன் பிடி சந்தையிலும், மீன்கள் சில்லறை விற்பனைக்கு கிடையாது என்று மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டது. இந்த காசிமேடுதான் பெரிய மீன் சந்தையாகும்.. அதனால் அடிக்கடி அங்கு ஆய்வும் நடத்தப்பட்டது. மாஸ்க், சமூக இடைவெளியுடன் மக்களும் மீன் வாங்கி கொண்டு போனார்கள்.

இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, மீன் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக போவதை தவிர்க்க வேண்டும்.

தேசிய கண்தான தினம்.. தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு தேசிய கண்தான தினம்.. தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

குறிப்பாக, காசிமேடு துறைமுகத்தில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை, முக கவசம் அணிவதில்லை... ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க கூட்டமாக குவிகின்றனர்.. அப்போது விதிகள் பின்பற்றப்பட வேண்டும்... ஞாயிறுதோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆக, மறுபடியும் கடைகளை மூடுவதும், மூடாததும் அசைவப்பிரியர்கள் கையில்தான் உள்ளது!

English summary
The only cure for corona infection is awareness, says CM Edapadi palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X