நடிகர் விஜய் டூ முதல்வர்.. 2 ஆண்டு திட்டத்தை செயல்படுத்திய அந்த நிழல்! யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய போதே பின்னணியில் இருந்து செயல்பட்டவர் ஜான் ஆரோக்கியசாமி. 2 ஆண்டுகளில் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று யாராவது கூறி இருந்தால், அதற்கான லாஜிக்களை ஆராயவே நாட்கள் கடந்திருக்கும். ஆனால் அந்த 2 ஆண்டுகளில் விஜய்க்கான திட்டத்தை தரமாக செயல்படுத்தி வெற்றிபெற வைத்திருக்கிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. தவெக தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் அதிக இடங்களில் வெற்றியை பெற்று ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கு முன் விஜய் தீவிர அரசியலில் இறங்குவார் என்பது தெரிந்திருந்தாலும், அவர் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று யாரும் கணித்திருக்கவில்லை.

John Arokiasamy Vijay TVK tamil nadu election 2026

ஆனால் அப்போதே விஜய்யுடன் கைகோர்த்தவர் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி. விஜய்க்காக தேர்தல் வியூக வகுப்பாளர் பணிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்ட ஜான் ஆரோக்கியசாமி, விஜய்யை வைத்து ஒரு புதிய அரசியல் புரட்சியை செய்துவிட்டார் என்றே சொல்லலாம். ஜான் ஆரோக்கியசாமி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்.

ஒரு வகையில் பார்த்தால், விஜய்யுடன் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் பலரும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்காள் தான். விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் விஷ்ணு ரெட்டியும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் தான். திருச்சி ஜெயிண்ட் ஜோசப் கல்லூரில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஜான் அரோக்கியசாமி, லயோலா கல்லூரியில் தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல் வியூக பணிகள் பக்கம் வந்த ஜான் ஆரோக்கியசாமி, 2016ஆம் ஆண்டு பாமக தலைவர் அன்புமணிக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்டார். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பிரச்சாரத்தின் மூலமாக அன்புமணியை தமிழ்நாடு முழுக்க கொண்டு சென்றார். இதே ஸ்டைலில் தான் விஜய்யும், வரலாறு திரும்புகிறது என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

அன்புமணிக்காக செய்த பிரச்சாரத்தில் செய்த சொதப்பல்களை, விஜய்க்கு பிரச்சாரம் செய்த தவிர்த்துவிட்டார். இதையடுத்து 2021-ஆம் ஆண்டு நாதக கட்சிக்கும், சீமானுக்கும் பணியாற்றியவர். இவர் மூலமாக விஜய் அரசியலுக்கு வருவதை சீமான் முன்கூட்டியே அறிந்து, விஜய்யுடன் கைகோர்க்க போகிறோம் என்று பேசிக் கொண்டிருந்தார்.

இவர் தமிழ்நாடு மட்டுமல்லாமல் சிவசேனா, சித்தராமையா ஆகியோருக்கும் வியூக வகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். விஜய்யின் பிரச்சாரம் தொடங்கி மாநாடு நடக்க வேண்டிய இடம், என்ன பேச வேண்டும், எங்கு கையை உயர்த்த வேண்டும், எங்கு சைக்கிளில் செல்ல வேண்டும், எங்கு திமுகவை அட்டாக் செய்ய வேண்டும் என்ற அத்தனை பாடங்களையும் திட்டமிட்டவர் ஜான் ஆரோக்கியசாமி தான். இதனால் அடுத்ததாக ஜான் ஆரோக்கியசாமியை தங்கள் பக்கம் கொண்டு வர பல்வேறு கட்சிகளும் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+