40 குண்டு.. வெட்டப்பட்ட தமிழக மீனவர் குடல்! இந்திய கடற்படையால் சுடப்பட்டவர்களிடம் விசாரித்த திருமா
சென்னை: இந்திய கடற்படையால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகாயமடைந்த தமிழக மீனவர்களின் உறவினர்களிடம் நலம் விசாரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஐ.என்.எஸ் கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் வீரவேல் என்ற மீனவர் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

கடற்படை விளக்கம்
இதுகுறித்து இந்திய கடற்படை அளித்துள்ள விளக்கத்தில் இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லையில், சந்தேகத்திற்குரிய படகு பல முறை எச்சரித்தும் நிற்காமல் சென்றதாகவும், வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் படகை நிறுத்தை வைக்க வேண்டும் என்பதற்காகவே துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறது.

திருமாவளவன்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் வீரவேல் உடல்நிலை குறித்து அவரது மனைவி மதிமதி, அவரது அண்ணன் ஆகியோரைத் தொடர்புகொண்டு விசாரித்தேன்.

குடற்பகுதி வெட்டியெடுப்பு
அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரிடமும் பேசினேன். வயிற்றிலிருந்த குண்டு அப்புறப்படுத்தப்பட்டதுடன் சேதமடைந்த குடற்பகுதியும் வெட்டியெடுக்கப்பட்டுவிட்டது என்பதையும் விளக்கினார். அவரைக் காப்பாற்ற அவருக்கு மேலும் உயர் சிகிச்சையளிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்

40 குண்டுகள்
இது குறித்து மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்திய கடற்படையினர் சுட்டதில் மீன்பிடி படகில் சுமார் 40 குண்டுகள் பாய்ந்துள்ளதாகத் தெரிகிறது. படகிலிருந்த 9 மீனவர்களைப் பிடித்து மூர்க்கமாகத் தாக்கியுள்ளனர்.
இதனை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications