ஏம்பா! கல்யாணம் பண்ணிட்டு அரசியல் பண்ண கூடாதா? பாசமாக கேட்ட தாயார்! திருமாவளவன் பதில் என்ன தெரியுமா?
சென்னை: திருமாவளவன் திருமணம் குறித்து அவ்வப்போது சில விவாதங்கள் மேலெழுந்து வருகின்றன. இதற்கு திருமாவும் பதிலளித்து வந்திருக்கிறார்.
இவ்வாறு இருக்கையில் திருமணம் குறித்து தனது தாய் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், அவரது திருமணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

விசிக
ஆதி திராவிட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. மட்டுமல்லாது தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு இயக்கங்களையும் முன்னெடுத்திருக்கிறது. இவ்வாறு இருக்கையில் கட்சியின் தலைவராக உள்ள திருமாவளவனின் திருமணம் குறித்து அவ்வப்போது சில விவாதங்கள் வருவதுண்டு.

திருமணம்
கருணாநிதியை சந்திக்க திருமாவளவன் வரும்போதெல்லாம், அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முறை கூறியிருந்தார். ஆனால், கருணாநிதி சொல்லி திருமா கேட்காத ஒரே விஷயம் திருமணம்தான் என்றும் அவர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திருமாவின் 60வது பிறந்தநாள் விழாவில், பங்கேற்றிருந்த ஸ்டாலின், திருமாவின் திருமணம் குறித்து பேசியிருந்தார்.

ஸ்டாலின்
அதில், "இன்றைக்கு இருப்பது போல் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நானும் திருமாவும் நெருங்கி பழகியிருந்தால் நானே அவருக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன். அது இயலாமல் போய்விட்டது. ஆனால் தற்போது கட்சியையே திருமா திருமணம் செய்துள்ளார். உங்களுக்கு தாயும் பிள்ளையுமாக இருக்கும் திருமாவை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு" விசிக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியிருந்தார்.

கேள்விக்கு பதில்
இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் திருமணம் குறித்து திருமாவின் தாயார் அவரிடம் கேட்டதாகவும், அவர் அதற்கு பதில் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, "திருமணம் செய்து கொண்டு அரசியல் கட்சி நடத்த முடியாதா ? என எனது அம்மா கேட்கிறார்கள். சராசரி அரசியல் நடத்துவதற்கும், தலித் மக்களை ஒன்றிணைத்து அமைப்பாக்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது." என்று திருமாவளவன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications