தவெக - பாமக கூட்டணியா? திட்டமிட்டு வதந்தி பரப்புறாங்க.. அவசர அவசரமாக விளக்கம் கொடுத்த திருமாவளவன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போகிறது என்ற செய்தியை திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக இருக்காது என்பதை 15 ஆண்டுகளாக சொல்லி, அதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், திடீரென தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போவதாக பேச்சுகள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் பாமக சட்டசபைக் குழு தலைவர் செளமியா அன்புமணி அமைச்சர் பதவியை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இடைத்தேர்தலில் பாமக எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்ததே காரணமாக பார்க்கப்பட்டது.

Thirumavalavan

அதுமட்டுமல்லாமல் இடைத்தேர்தலுக்கு பின் தவெக ஆட்சிக்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி இருக்கிறது. இதனால் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முடிவில் தவெக இருக்கிறது. இதன் காரணமாகவே விசிக தலைவர் திருமாவளவன் உடன் முதல்வர் விஜய் மேடையை பகிர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் இன்று தவெக கூட்டணியில் பாமக இணைகிறது மற்றும் அமைச்சர் பதவி தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்று செளமியா அன்புமணி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் தவெக கூட்டணியில் பாமக இணைவதாக வெளியான தகவல் தொடர்பாக ஃபேஸ்புக் லைவ்வில் வந்து விசிக தலைவர் திருமாவளவன் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில் திருமாவளவன் பேசுகையில், தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போகிறது என்ற செய்தியை திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக இருக்காது என்பதை 15 ஆண்டுகளாக சொல்லி, அதில் உறுதியாக இருக்கிறோம். தவெக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்ற வதந்தியை பரப்பினால், களத்தில் விசிகவினர் தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க மாட்டார்கள்.

விசிக ஆதரவு வாக்குகள் முழுமையாக தவெகவுக்கு சேராது என்று நினைக்கிறார்கள். இப்படி செய்தால் விசிகவினர் பின் வாங்குவார்கள். விசிக வாக்குகள் தவெகவுக்கு செல்லவிடாமல் தடுக்கலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் பாமக, பாஜக அணியில் விசிக இருக்காது. நமக்கு அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+